மழையில் மூழ்கிய கார், பைக்...க்ளெய்ம் கிடைக்குமா?

சோ.கார்த்திகேயன்

சென்னை  பேய் மழையில் சிக்கி சீரழிந்த வாகனங்களின் எண்ணிக்கை பல லட்சங்களுக்கு மேல். சில இடங்களில் கார்களும், பைக்குகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பை போலவும் காட்சி அளித்தன. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய கார், பைக் மற்றும் வீடுகளுக்கு இழப்பீடு கோர முடியுமா, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை எப்படி அணுகுவது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருக்கிறது. இது குறித்து வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர் திருமலையிடம் கேட்டோம்.

‘‘இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை பத்திரமாக பாதுகாப்பது நம்முடைய கடமை. உதாரணமாக, இன்ஷூரன்ஸ் செய்திருப்பதால், வாகனத்தை கண்டபடி ஓட்டி, அதனால் பாதிப்படைந்தால் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்காது. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பைக், கார்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும். மழை நீர், வெள்ள நீரில் கார் சிக்கி பாதிப்புக்கு உள்ளானால், முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட காரை ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இமெயில் முகவரிக்கு அனுப்பலாம். “என் வாகனம் இந்த பாலிசியில் கவராகியுள்ளது. இப்போது (தேதி, நேரம் குறிப்பிட்டு) மழைநீரில் மூழ்கி பழுதடைந்து நிற்கிறது. ஸ்பாட் சர்வே செய்து இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அந்த இ-மெயிலில் குறிப்பிட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்