வருமானத்துக்குள் செலவு... வளமான சேமிப்பு!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்து சூரியா

மும்பையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் சுந்தருக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம். எம்.ஏ படிப்பு முடிந்ததுமே 26-வது வயதிலேயே மும்பைக்கு பணிக்கு சென்றுவிட்டார். பெரிய போராட்டங்கள் எதையும் எதிர்கொள்ளாத சுமூகமான சூழலில் வாழ்க்கையை சுந்தர் அமைத்துக்கொண்டதற்கு அவருடைய உழைப்பும், சரியான திட்டமிடலுமே காரணம் என அவரிடம் பேசிய சில மணித்துளிகளிலேயே புரிந்துகொள்ள முடிந்தது. சுந்தருக்கு பெரிதாக அறிவுரைகளோ, ஆலோசனைகளோ அவசியப்படாது. ஏனென்றால் எல்லாவற்றையுமே பக்கா பிளானுடன் செய்துவருகிறார். ஆனாலும் அவருடைய திட்டங்களில் சில திருத்தங்களை செய்து தரச் சொல்லி கேட்டு நமக்கு மெயில் அனுப்பியிருந்தார்.

‘‘வருகிற வருமானத்துக்குள் செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகப்படுத்தும் பக்குவத்தை சம்பாதிக்க ஆரம்பித்த முதலே நான் பெற்றது பெரும்பாக்கியம். என் மனைவி நம்பி குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். மகள் ஷாலினி 9-ம் வகுப்பு படிக்கிறாள். மகன் ஷ்யாம் 3-ம் வகுப்பு படிக்கிறான். என் பெற்றோர் சொந்த ஊரில் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்