ஷேர்லக்: சந்தையை இறக்கும் ஆயில்!

‘‘நீர், நிலம், நீதி என ஆனந்த விகடனில் வந்த தலையங்கத்தை நீரும் வெளியிடுவது சாலப் பொருத்தம். மழை, வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்பை இதுவரை யாரும் சரியாக அளந்து சொல்லவில்லை. உலக அளவில் எட்டாவது மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என்கிறார்கள். குறைந்தபட்சம் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.20,000 கோடி) இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே 1.95 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நம் தமிழக அரசாங்கம், இந்த இழப்பை இனி எப்படி ஈடு செய்யப்போகிறது என்று தெரியவில்லை. ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு நகரம் என்று சொல்லப்பட்ட சென்னையிலேயே உள்கட்டமைப்புகள் என்பது இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. இனியாவது மழை நீர் செல்லும் பாதைகளைக் காத்து, ஆறு, குளங்களை அபகரிக்காமல் இருந்தால்தான் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட பேரிடர்களை சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் நீர் கவர் ஸ்டோரியில் எழுதியபடி மக்கள் வாழ்வதற்கான ஊர் என்கிற தகுதியை சென்னை இழந்துவிடும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிற மாதிரி விகடனும் களம் இறங்கி இருப்பதற்கு ஒரு சபாஷ்’’ என்று தன் மனதில் இருந்ததை நம்மைப் பார்த்தவுடன் கொட்டினார் ஷேர்லக். அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு, செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தோம்.

‘‘கடந்த வியாழன் தவிர, சந்தை தொடர்ந்து இறக்கத்திலேயே இருக்கிறதே!’’ என்று கேட்டோம் சற்று கவலையுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்