அமெரிக்க வட்டி விகித உயர்வு... இந்திய சந்தைகளை பாதிக்குமா?

இரா.ரூபாவதி

மெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்தலாமா அல்லது இப்போது இருக்கும் நிலையிலேயே விட்டுவிடலாமா என்பது குறித்து முடிவு செய்ய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வருகிற 15, 16-ம் தேதிகளில் கூட்டம் நடத்த இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா, அப்படி உயர்த்தப் பட்டால் இந்திய சந்தையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், வெளிநாட்டு முதலீட்டாளர் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளதா  என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு பதிலை சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன். 

“கடந்த ஒரு வருடமாக பலரும் பேசும் விவாத பொருளாக இருந்த அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு இப்போது முடிவுக்கு வர உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்படவே இல்லை. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம்; அப்படி அதிகரிக்கும்பட்சத்தில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பெரிய அளவு முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை மீண்டும் அமெரிக்கா நோக்கித் திசை திருப்பும் வாய்ப்புள்ளது. இதற்கு இங்குள்ள முதலீடுகளை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் பங்குகளின் விலை குறையலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. இந்த எண்ணம் சரியா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்