நிஃப்டி எதிர்பார்ப்புகள்! - எச்சரிக்கை, நெகட்டிவ் செய்திகளால் வேகமான இறக்கம் வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ற்ற இறக்கங்கள் மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் டேட்டாக்களின் அடிப்படையைக்கொண்டே நிஃப்டியின் போக்கு இருக்க வாய்ப்புள்ளது என்றும் வியாபாரத்தை முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது என்றும் சொல்லியிருந்தோம். நான்கு நாட்கள் இறக்கத்தையும் ஒரு நாள் ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக நூற்றி எழுபத்தியோரு புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் மிகவும் முக்கிய நிகழ்வான அமெரிக்க வட்டி விகித முடிவுகள் வெளிவர இருக்கிறது. இதனை ஒட்டியே சந்தையின் போக்கு இருக்கும் என்பதால் சந்தையின் போக்கை யூகித்து வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தை முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது. டெக்னிக்கலாகவும் மிகவும் பெரியதொரு வீக்னெஸ் சந்தையில் வந்துவிடக்கூடிய நிலையிலேயே சந்தை தொடர்ந்து இருந்துவருகிறது. நெகட்டிவ்வான செய்திகள் வந்தால் சந்தை வேகமான இறக்கத்தைச் சந்தித்துவிடக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டே டிரேடர்கள் வியாபாரத்தில் ஈடுபடவேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சந்தையின் போக்கை யூகிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பதால் வியாபாரத்தின் அளவினை குறைத்து ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்வதே மிகவும் நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். ஷார்ட் சைட் மற்றும் ஓவர் நைட் பொசிஷன்களை தவிர்ப்பதே மிகமிக நல்லது எனலாம். அதிக கவனம் தேவைப்படும் வாரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்