கமாடிட்டி டிரேடிங் - மெட்டல்&ஆயில்!

இரா.ரூபாவதி.

மெரிக்காவின் வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா நிவேஷ் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் குமார் ஜெயின் விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!

‘‘அமெரிக்காவின் வட்டி விகித உயர்வுக்குப்பின் டாலரின் மதிப்பு மேலும் வலுவடைந்து, கச்சா எண்ணெய்யின் விலை சரிய துவங்கியது. இதோடு அதிக வரத்தின் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்துகொண்டே வந்தது.

 அமெரிக்காவின் இஐஏ (Energy Information Administration) அமைப்பு டிசம்பர் 11-ம் தேதி வார இறுதியில்,  கச்சா எண்ணெய்யின் வரத்து 4.8 மில்லியன் பேரல் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தவுடன், டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் 4% விலை சரிந்தது. தற்போது ஒரு நாள்  கச்சா எண்ணெய்யின் இருப்பு கடந்த 80 வருடங்களில்  இல்லாத அளவுக்கு 490.7 மில்லியன் பேரலாக உள்ளது.

ஒபெக் நாடுகள் ஒரு நாளைக்கு 30 மில்லியன் பேரலுக்கு மேல் உற்பத்தி செய்ய  முடிவெடுத்ததில் இருந்து கச்சா எண்ணெய்  விலை 50% சரிந்துள்ளது. டபிள்யூடிஐ கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு 35 டாலருக்குக் கீழ் வர்த்தக மாகி உள்ளது.

அதிக வரத்து, வட்டி விகித உயர்வு, தேவைக் குறைவு,டாலரின் மதிப்பு வலிமையாக இருப்பது போன்ற காரணங்களி னால் ஒரு பேரல்  கச்சா எண்ணெய்யின் விலை  32 - 30 டாலர் அளவுக்குச் சரிய வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியச் சந்தைகளில் ஒரு பேரல் ரூ.2,420-க்கு  வர்த்தகமா கிறது. வாரந்திர முடிவில் ரூ.2,400-க்கு கீழ் முடிவடைந்தால், மேலும் சரிந்து 2330 - 2280 - 2150 ரூபாய் வரை இறங்கலாம். ரூ.2540-க்கு மேல் தொடர்ந்து மூன்று நாட்கள் மற்றும் வாராந்திர முடிவு ஏற்பட்டால்தான் ஏற்றம் வர வாய்ப்புள்ளது.

தங்கம்!

அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியதன் விளைவாக, டாலரின் மதிப்பு மேலும் வலுவடைந்து தங்கத்தின் விலை சரிய துவங்கியது.வட்டி விகிதத்தை உயர்த்தியபின் ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 10 டாலர் அளவுக்கு மேல் சரிந்தது. அதாவது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,068 டாலரில் இருந்து 1,055-ஆக சரிவடைந்தது. ஒரு வாரத்தில் 2% விலை சரிந்துள்ளது. ஆக மொத்தமாக, இந்த வருடத்தில் தங்கத்தின் விலை 11% அளவுக்குச் சரிவை சந்தித்துள்ளது. இது கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவாகும். இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை.

தற்போது தங்கத்தின் விலை இவ்வளவு வேகமாகச் சரிவதற்கான காரணம். அடுத்த வருடம் இன்னும் 1% வட்டி விகிதத்தை உயர்த்துவோம் என ஃபெடரல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை இன்னும் 3 - 5% அளவுக்குச் சரிய வாய்ப்புள்ளது. அதாவது, அடுத்த வருடத்தில் 1000 டாலருக்குக் கீழே குறைந்து 975 டாலர் வரை சரிய வாய்ப்புள்ளது. உடனடியாக 1,020 டாலர் வரை சரிய வாய்ப்புள்ளது. இந்தியச் சந்தைகளில் 24 காரட்- 10 கிராம் ரூ. 25,100-க்கு மேல் உயர்ந்தால்தான் ஏற்றம் வர வாய்ப்புள்ளது.

காப்பர்!

வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின் அனைத்து உலோகங்களின் விலையும் வெகுவாக சரிந்திருக்கிறது.  ஏற்கெனவே காப்பரின் விலை வெகுவாக சரிந்திருந்த நிலையில்  அமெரிக்க வட்டி விகித உயர்வினால், விலை மேலும் சரிவடைய ஆரம்பித்துள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு, உலகச் சந்தை விடுமுறையாக இருக்கும் என்பதால், காப்பரின் விலை கடந்த வாரத்தில் 3% அளவுக்குச் சரிந்துள்ளது. எனவே வரும் வாரத்தில் இதன்  விலை இறக்கத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!


அக்ரி கமாடிட்டியைப் படிக்க: http://bit.ly/1mrCM5l

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick