நாட்டின் நலனைத் தடுக்கும் கட்சிகளை ஒதுக்குவோம்!

ஹலோ வாசகர்களே..!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவு பெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இந்த முறையாவது கட்டாயம் நிறைவேறும் என்று எதிர்பார்த்த ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறவில்லை. இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகள் ‘ஈகோ’வை மறந்து செயல்பட வேண்டும் என்று கடந்த 23.8.2015 தேதியிட்ட நாணயம் விகடன் தலையங்கத்தில் கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசியல் கட்சிகள் நாட்டின் நலனுக்காக தங்கள் ‘சுயநலத்தை’ விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

‘ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்ற இப்போது அனுமதித்தால், அடுத்த இரு ஆண்டுகளில் பணவீக்கம் சற்று அதிகரித்தாலும், அடுத்துவரும் ஆண்டுகளில் பொருட்களின் விலை குறைந்து, பணவீக்கமும் குறையும். இதனால் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும். இது மோடிக்குத்தான் பாசிட்டிவ்-ஆக இருக்கும்’ என்று கருதுகிறது காங்கிரஸ். ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஆதரவு தருவதை 2017 வரை தள்ளிப் போட்டால்,  பா.ஜ.க.வுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.  இதன் மூலம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. எளிதாக வெற்றி பெறுவதற்கு ‘செக்’ வைத்திருக்கிறது காங்கிரஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்