ஃபைனான்ஷியல் பிளானிங்

பட்டையைக் கிளப்பும் பக்கா பிளான்!கா.முத்து சூரியா

‘‘நான் படித்தது பத்தாம் வகுப்புதான். பில்டிங் மேஸ்திரியாக இருக்கேன். எனக்கு 44 வயது. எனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கு; என் மனைவி நிர்மலாவுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுத்திருக்கேன். 4.5 லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுத்துள்ளேன். விபத்தினால் ஏற்படக்கூடிய இழப்பு மற்றும் சம்பாத்தியம் இல்லாத நிலையை சமாளிக்க ஆக்சிடென்ட் பாலிசி ரூ.31 லட்சத்துக்கு எனக்கும், ரூ.15 லட்சத்துக்கு என் மனைவிக்கும் எடுத்துள்ளேன்’’ என எடுத்த எடுப்பிலேயே நம்மை திக்குமுக்காட வைத்தார் சேலத்தை சேர்ந்த வித்யா சங்கர். டேர்ம் பாலிசி, மெடிக்ளெய்ம் மட்டுமல்ல, ஹவுஸ் ஹோல்டர் பாலிசி ரூ.60 லட்சத்துக்கு (பில்டிங் ரூ.50 லட்சம், எலெக்ட்ரிக்கல் - பர்னிச்சர் ரூ.10 லட்சம்) எடுத்து வைத்துள்ளார். சேமிப்பு, முதலீடு, காப்பீடு என பட்டையைக் கிளப்புகிறார் வித்யா சங்கர்.

“நான் எனது குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். எனது கடமைகள் எப்போதும் தொடர வேண்டும். குடும்பத்தின் கனவுகள் எந்த சூழலிலும் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் டேர்ம் பாலிசியை கட்டாயமாகத் தேர்வு செய்தேன். நான் 30 ஆண்டு காலமாக கட்டடத் தொழிலில் கடுமையாக உழைத்ததன் மூலமாக என் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்