அமெரிக்க வட்டி உயர்வு... இனி ஏறுமா சந்தை?

சி.சரவணன்

டந்த ஒன்பது மாதங்களாக இ்தோ, அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த அமெரிக்க வட்டி விகித அதிகரிப்பு ஒரு வழியாக டிசம்பர் 16 (2015) அன்று நிறைவேறி இருக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜேனட் யெல்லென், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியதை அடுத்து  0.25% வட்டி விகித உயர்வு முடிவை எடுத்திருக்கிறார். ஃபெடரல் ஓப்பன் மார்க்கெட் கமிட்டி (Federal Open Market Committee FOMC) உறுப்பினர்கள் இது பற்றி கருத்து கூறும்போது, ‘‘2016-ம் ஆண்டுக்கான அமெரிக்க வட்டி விகித இலக்கு 1.375 சதவிகிதமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அந்த வகையில், வரும் 2016-ம் ஆண்டில்  வட்டி இன்னும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அமெரிக்காவில் கடைசியாக 2006, ஜூன் மாதத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. 2007-09-ம் ஆண்டுகளில் அங்கு தகுதி இல்லாதவர்களுக்கு கண்டபடி வீட்டுக் கடனை அள்ளிக் கொடுத்ததால், சப் பிரைம் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி குன்றியது. இதன் பிறகு வட்டி குறைக்கப்பட்டு வந்து, 2008 டிசம்பரில் 0.25% என்ற நிலையில் வந்து நின்றது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்