ஷேர்லக்: சரிய வைத்த அறிக்கை!

ரபரவென இதழ் முடிக்கும் பணியில் இருந்தபோது, திடீர் தரிசனம் தந்தார் ஷேர்லக். ‘‘10 மணிக்கு பெங்களூர் ரயில் ஏறவேண்டும். சட்டென்று செய்திகளை சொல்லிவிடவா?’’ என்று பறந்தார். அவரை முதலில் உட்கார வைத்து ஏலக்காய் டீ தந்தோம். அதை குடித்தபடியே நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானார்.

‘‘இந்த வாரத்தில் அமெரிக்காவில் வட்டி விகிதம் நிச்சயம் உயர்த்தப்படும் என்று தெரிந்தபின்னும் சந்தை ஏற்றத்தில்தான் இருந்தது. காரணம், இந்த வட்டி விகிதத்தை முன்பே எதிர்பார்த்து சந்தை தன்னை சரிசெய்துகொண்டுவிட்டது. தவிர, பாதிப்பு பெரிதாக இருக்கும் என்று  பலரும் பயம் காட்டியதன் விளைவாக, பலரும் பங்குகளை விற்று வெளியேறி இருந்த நிலையில், பல நல்ல பங்குகளின் விலை 15 முதல் 20% வரை விலை குறைவாக கிடைத்தது. இதனால் உச்ச விலையில் பங்குகளை விற்றுவிட்டு, எப்போது விலை குறையும் என்று காத்திருந்த சில பெரிய முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். இதனால் சந்தை உயர்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்