தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செ.கார்த்திகேயன்

பிள்ளையாருக்குச் செய்யும் பூஜைக்கு மட்டுமல்ல, வீட்டு உபயோகத்துக்கும் முக்கியமான தேவையாக இருக்கிறது தேங்காய். உலகம் முழுக்கவுமே இதற்கு நிறைய தேவை இருப்பதால், ஏற்றுமதியிலும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய தென் இந்திய மாநிலங்களில் தேங்காய் மிக அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது. விளைவிக்கப்படும் தேங்காய்களில் பெரும்பாலானவை உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டாலும், வெளிநாடுகளின் தேங்காய் தேவைக்காக ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

 

தேங்காய்களில் பல வகைகள் இருப்பதுபோல, தேங்காய் தண்ணீர், தேங்காய் எண்ணெய், கொப்பரைத் தேங்காய், தேங்காய் ஃபைபர், தேங்காய் பித் (தேங்காய் மட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் செங்கல்) என தேங்காயிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களும் பல. இவை அத்தனையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதுவான பொருட்கள் என்பதே ஏற்றுமதியாளர் களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியிலிருந்து தேங்காய் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றி சென்னையில் உள்ள எஃப்ஐஇஓ அலுவலக வட்டாரத்தில் பேசினோம்.

அதிகம் பயன்படுத்தும் பொருள்!

'தேங்காய் உற்பத்தியில் 80 உலக நாடுகள் தங்களை ஈடுபடுத்தி இருக் கின்றன. இவற்றுள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளே எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றன. தேங்காய், தேங்காய் ஆயில் கேக், கயிறுகள், தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்படும் கால்மிதி, வினிகர், வெல்லம், கரித்துண்டு என இன்னும் பல பொருட்கள் தென் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன.

தேங்காய் ஏற்றுமதியில் ஈடுபட நினைப்பவர்கள் நிச்சயமாக கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியத்திடம் உரிமம் பெற்றாக வேண்டும் என்பது கட்டாயம். இந்த அமைப்பில் பதிவு செய்திருக்கும்பட்சத்தில், அவர்களே ஏற்றுமதி குறித்த பல்வேறு தகவல்களையும்   இறக்குமதியாளர்கள் குறித்த விவரங் களையும் தருவார்கள்.

ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள நாடுகள்!

இன்றைய நிலையில் இந்தியா மொத்தம் 150 நாடுகளுக்கு தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதிகமாக, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன், சவுதி அரேபியா, நெதர்லாந்து, சீனா, இங்கிலாந்து, கொரியா, நேபாள் மற்றும் இன்னும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 201314ம் நிதியாண்டில், தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்கள் (கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருட்கள் அல்லாமல்) 1,250 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகி இருக்கிறது. இது, இதற்கு முந்தைய 201213ம் நிதியாண்டில் 1,050 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் 60,000 டன் கரிக்கட்டை (தேங்காய் சிரட்டையை எரியூட்டி தயாரிக்கப்பட்டது) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது. தேங்காய் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கரிக்கட்டைக்கு வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, தென் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் தேவை அதிகமாகக் காணப்படுகிறது.

பொதுவாக, தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களுக்குச் சிறப்பான ஏற்றுமதி வாய்ப்புகள் இருந்து வருகின்றன. முக்கியமாக அமெரிக்க நாடுகளில் தேவையானது அதிகரித்துக் காணப் படுகிறது. தேங்காய் மற்றும் தேங்காய் பொருட் களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு அரசானது பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருவது கவனிக்கத்தக்கது' என்றார்கள்.

துபாயில் தேங்காய்க்கு மவுசு!

தேங்காய்களை விளைவிக்கும் விவசாயிகளில் ஒரு சிலரே நேரடியாக ஏற்றுமதி செய்கிறார்கள். ஆனால், விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களே அதிகம். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜ், கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அவரிடம் தேங்காய் ஏற்றுமதி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்றும், அதிலுள்ள நெளிவுசுளிவுகளையும் கேட்டோம்.

'இந்த ஏற்றுமதி தொழிலை ஆரம்பிப்பதற்குமுன், இதற்காக பல நாட்களைச் செலவு செய்து ஏற்றுமதி சார்ந்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டேன். அதில் கிடைத்த அறிவு மற்றும் அனுபவத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, 3 ஸ்டார் எக்ஸ்போர்ட்ஸ் என்கிற நிறுவனத்தை அமைத்து ஏற்றுமதி செய்து வருகிறேன்.

நான் ஏற்றுமதி செய்யும் தேங்காய்கள் பெரும்பாலும், பொள்ளாச்சி மற்றும் கர்நாடகாவில் வாங்கப்பட்டதாக இருக்கும். இன்றைய நிலையில் தேங்காய்க்கு அதிக மவுசுள்ள நாடாக துபாய் விளங்குகிறது. அதனால்தான் நான் துபாய்க்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறேன். தற்போது மாதம்  இரண்டு கன்டெய்னர் தேங்காய்கள் அனுப்பும்படியாக ஆர்டர்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

எடை, தரம் முக்கியம்!

இறக்குமதியாளர்கள் தேங்காய் களுக்கான ஆர்டர்களை வழங்கும்போது, தேங்காய்களின் எடை, தரம் ஆகிய வற்றைக் குறிப்பிட்டே வழங்குவார்கள். பெரும்பாலான இறக்குமதியாளர்கள் 500550 கிராம் எடை கொண்ட தேங்காய் களையே விரும்புகிறார்கள். சிறிய மற்றும் எடை குறைவாக உள்ள தேங்காய்களை விரும்புவதில்லை. ஒரு பையில் 25 தேங்காய்கள் வைத்தே பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இன்றைய நிலையில் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பை தேங்காய்க்கு 8  9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.496) வரை விலை கிடைக்கிறது. அதேபோல, கொப்பரைத் தேங்காய்க்கும் உலக நாடுகள் மத்தியில் மவுசு அதிகரித்துக் காணப் படுகிறது. சாதாரண தேங்காயைவிட இந்தக் கொப்பரை தேங்காய் விலை அதிகம். அதேசமயம், ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானமும் அதிகம்.

பரிசோதனை தேவை!

சமீப காலமாக உலக நாடுகள் மத்தியில் தேங்காய் பால் மற்றும் தேங்காய் பவுடர் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. கனடாவில் இருந்து தேங்காய்ப் பாலுக்கான ஏற்றுமதி ஆர்டர் கிடைத்துள்ளதால், தற்போது அந்த வேலையில் ஈடுபட்டு வருகிறேன். உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு நமது அரசானது மானியம் வழங்கி வருகிறது. அந்தவகையில் தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்கள் ஏற்றுமதிக்கும் மானியம் கிடைக்கிறது.

ஏற்றுமதியாகும் தேங்காய் முற்றலாக இல்லை என்று தெரிந்தால், பேசிய தொகையிலிருந்து கொஞ்சம் தொகையைக் குறைத்தே தருவார்கள். இதனால் ஏற்றுமதிக்குமுன் தேங்காயின் தரத்தை ஒருமுறைக்கு நான்குமுறை பரிசோதித்துக் கொள்வது நல்லது' என்றார்.

தேங்காய் பித் மற்றும் முறுக்குக் கயிறு!

கடந்த ஏழு ஆண்டுகளாக, தேங்காய் பொருட்களான தேங்காய் நார், கயிறு, தேங்காய் பித் (நீஷீநீஷீஸீut ஜீமீணீt  நாரினால் செய்யப்பட்ட செங்கல்) போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துவரும் தேனி பி.வேல்முருகனிடம், அதற்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றிக் கேட்டோம்.

'தேங்காய் நாருக்கு சீனாதான் அதிக ஏற்றுமதி வாய்ப்புள்ள நாடாகும். அதனால் நான் உற்பத்தி செய்யும் தேங்காய் நார்கள் மொத்தத்தையும் சீனாவுக்கே ஏற்றுமதி செய்துவருகிறேன். நாரினால் செய்யப்படும் செங்கல் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் இதைப் பெரும்பாலான நாட்டில் செடிகள் வளர்ப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்றைய நிலையில் ஒரு டன் தேங்காய் பித் 240 டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது சிறப்பான விலையாகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒரு டன் தேங்காய் பித் 180 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.11,160) ஏற்றுமதியானது. தேவை அதிகரித்திருப்பதும், தேங்காய் பித் தயாரிக்கப் போதுமான மூலப்பொருட்கள் இல்லாததும் தான் விலை ஏற்றத்துக்குக் காரண மாகும். வர்த்தகம் என்கிற ரீதியில் என் கணிப்பு ஒரு டன் தேங்காய் பித் 270 டாலர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. அதேபோல, முறுக்கிய நார் கயிறானது சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

2007-ல் தேங்காய் பொருட்களை ஏற்றுமதி செய்தபோது அலைபேசி வசதிகள் இல்லை. மெயில்களை நம்பியே செய்யவேண்டி இருந்தது. ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என வளர்ந்திருப்பதால், இறக்குமதியாளர்களைத் தொடர்புகொள்ள, அவர்களுடன் செய்தியை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.

ஆனால், ஏற்றுமதியாளர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தேங்காய் ஏற்றுமதியில் இறங்குபவர்கள் தயவு செய்து எண்ணிக்கை அடிப்படையில் ஏற்றுமதி செய்யாமல், தரத்தைக் கருத்தில்கொண்டு ஏற்றுமதி செய்ய வேண்டும்' என்றார்.

தேங்காய் ஏற்றுமதியில் நீங்களும் இறங்கலாமே!

படங்கள்: தி.விஜய், சக்தி அருணகிரி.

 

வழிகாட்டும் ரத்தன் டாடா!

ஆன்லைன் ஃபர்னிச்சர் ரீடெயிலரான அர்பன்லேடர்.காம் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்து இருக்கிறார். ஓய்வுபெற்றபிறகு இளைய தலைமுறை தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாகச் செயல்படுகிறார் ரத்தன். அர்பன்லேடர்.காம் நிறுவனத்தில் பொருள், வியாபார உத்தி என்று மட்டும் நின்றுவிடாமல், ஃபர்னிச்சர்களின் டிசைன்கள், அது செய்யப்படும் மரம் பற்றியெல்லாம் தன்  ஆலோசனைகளை வாரி வழங்கியிருக்கிறார் ரத்தன்.


ஏற்றுமதியாளர்கள் கவனத்துக்கு...

ஏற்றுமதி தொழில் சார்ந்த உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை exports@vikatan.com என்கிற மெயில்  ஐடி-க்கு அனுப்பி வையுங்கள். குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வி மற்றும் சந்தேகங்களைப் பதிவு செய்யலாம். அதற்கு 044-668029920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.


நான் ஏற்றுமதி தொழில் தொடங்கவுள்ளேன். இதற்கு உரிமம் எப்படி பெறுவது; அதற்கான செலவு எவ்வளவு; எங்கிருந்து உலக இறக்குமதியாளர்கள் பட்டியலைப் பெறுவது?


என்.ஹரிஷ், ஈரோடு.
உன்னி கிருஷ்ணன், இணை துணை பொது இயக்குநர், FIEO


“ஏற்றுமதியை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்தில் அதற்கான உரிமம் பெறுவது பற்றி யோசிக்க வேண்டாம். முதலில், ஐஇசி எண்ணை (Import - Export Code (IEC) Number) வாங்க வேண்டும். இதற்கு http://zjdgft.tn.nic.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான செலவு வெறும் 500 ரூபாய் மட்டும்தான். இறக்குமதி ஏற்றுமதிக்கான எண்ணை பெற்ற பிறகே, ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்ய தேர்வு செய்திருக்கும் பொருட்கள் அடிப்படையில் அந்தந்த புரமோஷனல் கவுன்சிலிடம் உரிமம் பெற வேண்டும். பல பொருட்களை ஏற்றுமதிக்காக தேர்வு செய்கிறீர்கள் என்றால், எஃப்ஐஇஓ-விடம் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.
இன்றைய நிலையில், இறக்குமதியாளர்களின் பட்டியலை எங்கு சென்றும் பெற முடியாது. காரணம், பெரும்பாலான இறக்குமதியாளர்கள் அவர்களாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடி அதை பெற்றுக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகள் மற்றும் குறிப்பிட்ட பொருட்களுக்கான இறக்குமதியாளர் கள் விவரங்கள், அவர்களின் தொடர்புகளை இன்று பல வலைதளங்கள் வழங்கி வருகின்றன. இருப்பினும் இதிலுள்ள தகவல்களை முழுமையாக நம்பாமல், தீர விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது. www.fieo.org என்கிற இணையதளத்திலும் நாடுகள் வாரியாக, பொருட்கள் வாரியாக இறக்குமதியாளர்களின் விவரங்களைக் கொடுத்திருக்கிறோம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick