கம்பெனி ஸ்கேன்: ஷிவம் ஆட்டோடெக் லிமிடெட்! (SHIVAMAUTO)

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் ஷிவம் ஆட்டோடெக் லிமிடெட் (NSE SYMBOL: SHIVAMAUTO) எனும் ஆட்டோ உதிரிபாகங்கள் (காம்போ னென்ட்) தயாரிக்கும் நிறுவனமாகும்.

1999-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், முஞ்சால் ஆட்டோ காம்போனென்ட்ஸ் என்ற பெயரை தற்போதிருக்கும் பெயருக்கு முன்னால் கொண்டி ருந்து, ஹீரோ குழுமத்தின் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

ஏறக்குறைய 3,000 தொழிலாளர்களைத் தன்வசத்தே கொண்டி ருக்கும் இந்த நிறுவனம், ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு கியர் ப்ளாங்க்ஸ், ஸ்ப்லைன் ஷாஃப்ட், பினிஷ்ட் கியர்ஸ் மற்றும் ப்ளஞ்சர்ஸ் போன்ற பல உதிரி பாகங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது.

இந்திய அளவில் சில நிறுவனங்களே கொண்டிருக்கும் போர்ஜிங் துறையில் குளிர் மற்றும் வெப்ப நியர் நெட் ஷேப் டெக்னாலஜியை இந்த நிறுவனம் உபயோகிப்பது இதன் தனிச் சிறப்பு. ஹீரோ மோட்டோ கார்ப், முஞ்சால் ஷோவா, முஞ்சால் ஆட்டோ இண்டஸ்ட் ரீஸ் லிட், சத்யம் ஆட்டோ காம்போனென்ட்ஸ் லிமிடெட் போன்றவற்றை உள்ளடக்கிய இருபது நிறுவனங்களைக் கொண்டுள்ள ஹீரோ குழுமத்தில் அங்கம் வகிக்கிறது இந்த நிறுவனம்.

டிரான்ஸ்மிஷன் கியர்கள், டிரான்ஸ்மிஷன் ஷாஃப்ட்கள், வார்ம் போர்ஜ்டு காம்போ னென்டுகள், பவர் ட்ரெய்ன் காம்போனென்டுகள், இன்ஜின் டிரான்ஸ்மிஷன் காம்போ னென்டுகள், 3 எஸ்டீஎன் ஹாட் ப்ரேம்டு காம்போனென்ட்ஸ், 5 எஸ்டீஎன் கோல்டு ப்ரேம்டு காம்போனென்ட்ஸ் போன்ற பிரிவுகளில் ஆட்டோ காம்போ னென்டுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

போஸ்ச், ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுஸூகி, மிட்சுபா சைகல், ஹில்ட்டீ, டென்ஸோ, இசட் எஃப் லெங்க்சிஸ்டெம், முஞ்சால் ஷோவா, இந்தியா நிப்பன் எலெக்ட்ரிக்கல்ஸ் போன்ற முன்னணி நிறுவனங் களைத் தன் வாடிக்கையாளர் களாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

இந்தியாவில் குர்கான் (மனேசர்), பினோலா (குர்கான்), ரோஹ்டக், ஹரித்துவார், பெங்களூரு போன்ற நகரங்களில் தன் தொழிற்சாலையை நிறுவி செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், ஷிவம் ஆட்டோடெக் நிறுவனத்தின் முக்கிய மற்றும் மிகப் பெரிய வாடிக்கையாளராகத் தொடர்ந்து இருந்துவருகிறது.

இந்திய சந்தையில் ஆட்டோ மொபைலை தயாரித்து விற்பனை செய்யும் பல்வேறு அந்நிய நாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் உதிரிபாகங் களை உபயோகப்படுத்துவதையே விரும்புகின்றன. கடந்த பத்து வருடங்களில் இந்த வகை உள்நாட்டு உதிரிபாக உபயோகிப் பானது 80 சதவிகித அளவுக்கு  ஒரு  புதிய  காரில் இருக்குமளவு பார்த்துக்கொள்கின்றன இந்த நிறுவனங்கள்.

பொதுவாக, ஆட்டோ மொபைல் உற்பத்தித் துறையில் பல்வேறு உள்நாட்டு உதிரிபாகங் கள் தயாரிப்பாளர்களே  பங்கெடுக்கின்றனர். பெரும்பாலான ஆட்டோ மொபைல் நிறுவனங் கள் தங்களால் இயன்ற அளவுக்கு அனைத்து உதிரிபாகங்களையும் உள்நாட்டிலேயே இவ்வகை உதிரிபாக உற்பத்தியாளர்களிடம் இருந்து தயாரித்துப் பெறவே விரும்புகின்றன.

புதிய மாடல்களும், புதிய டெக்னாலஜியும் அறிமுகப் படுத்தப்படும் சமயத்தில் அயல்நாட்டில் இருந்து உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப் படுகின்றன. என்றாலும் உற்பத்திச் செலவு குறைவு, அந்நியச் செலாவணி விலை மாற்றத்தால் வரும் பாதிப்பு, அரசாங்கத்தின் உள்ளூர் உற்பத்தி நடைமுறைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் படிப்படியாக உள்நாட்டிலேயே தங்களுடைய உதிரிபாகங்களைத் தயாரித்துப் பெற்றுக்கொள்ளவே அதிக விருப்பம் கொண்டிருக்கின்றன. இதனாலேயே ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வியாபார வாய்ப்பு அதிகரிக்கும்.

பொதுவாக, ஆட்டோ மொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மிகவும் செலவுக் கட்டுப்பாட் டுடனும் குறைந்த அளவு லாபத் துடனுமே செயல்படுமாறு (காஸ்ட் கட்டிங் மற்றும் லோயர் மார்ஜின்) கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு விதமான வியாபார நடைமுறைகளை வைத்திருக்கும். ஏனென்றால், மிக அதிக எண்ணிக்கையில் உதிரிபா கங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ஆட்டோமொபைல் நிறுவனங் களால் வாங்கப்படுவதால், உதிரிபாக உற்பத்தியாளரிடத்தில் ஏற்படும் சிறிய அளவிலான அதிகப்படியான செலவு/லாப மார்ஜின் அதிகரிப்பு என்பது கார் தயாரிக்கும் நிறுவனங்களின் விலை ரீதியான போட்டிபோடும் தன்மையையும் லாபத்தையும் குறைத்துவிடும் வாய்ப்பு மிக மிக அதிகம். இதனாலேயே உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான காஸ்ட் கட்டிங் முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவரும்.

இருப்பினும், இன்ஜின் மற்றும் ட்ரைவ் டிரான்ஸ்மிஷன் உதிரிபாகங்கள் உற்பத்தி என்பது அதிக முதலீடும், நவீன தொழில் நுட்பமும், மிகுந்த தொழில்நுட்ப அனுபவமும் தேவைப்படும் ஒரு துறையாக இருக்கிறது. ஆட்டோ மொபைலின் இதயம் போன்ற இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தயாரிப்பு என்பது நல்லதொரு தரமான கட்டுமானத்துடன் செய்ய வேண்டிய ஒரு தொழிலாக வும் இருக்கிறது.

 இதனாலேயே கடுமையான மார்ஜின் அழுத்தங்கள் நிறைந்த ஆட்டோ மொபைல் உதிரிபாக உற்பத்தித் தொழிலில் இந்தவகை இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சற்றே கணிசமான அளவில் லாபம் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

ஏற்கெனவே மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுப் பின்னர் பட்டியலிடுதலில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட (டீலிஸ்டிங்) நிறுவனமான ஃபேர் பீல்ட் அட்லாஸ் நிறுவனத் தையும் சேர்த்து பல்வேறு பட்டி யலிடப்படாத நிறுவனங்கள் இதே வகையான ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த காலத்தைப் பார்த் தாலுமே பல்வேறு ஆட்டோ மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து  தொழில் ஆரம்பிக்கும்போது தங்கள் உதிரிபாக சப்ளையர் களை இந்தியாவுக்கு வரும்படி செய்து கூட்டுத்தொழில் மூலமோ, தனியாகவோ உற்பத்தி வசதிகளைச் செய்து கொண்டு உள்ளன என்பது தெரியவரும்.

இந்த வகைக் கூட்டுத் தொழில் களே நல்லதொரு வாய்ப்பை பல்வேறு உதிரிபாகத் தயாரிப்பா ளர்களுக்கு வழங்கியுள்ளது எனலாம்.

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பைப் பொறுத்தவரையில், ஒரே நிறுவனத்துக்காகவோ அல்லது சில நிறுவனங்களுக்கு மட்டுமோ உதிரிபாகங்கள் தயாரிப்பது என்பது சற்று ரிஸ்க்கான விஷயமாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், ஒரே நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் உதிரிபாக உற்பத்தியாளரின் வருமானம் என்பது அந்த கார்/மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றி/தோல்வியைச் சார்ந்தே அமைவதாய் இருக்கும்.

உதிரிபாகங்கள் சப்ளை செய்யப்பட்டும் கார்/மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் வாகனங்கள் சந்தையில் சரிவர விற்பனையாகாதபோது அவர் களை முழுமையாகச் சார்ந்திருக் கும் உதிரிபாக உற்பத்தியாளர் களும் விற்பனையிலும் லாபத்தி லும் பின்தங்கிவிட வாய்ப்பு அதிகம்.

இந்த நிறுவனத்தைப்   பொறுத்தவரை, உலகத்தின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர் (சுமார் 13 ஆண்டு களாக) ஹீரோ மோட்டாரின் பங்களிப்பு என்பது மிகவும் கணிசமான அளவில் இருந்த போதிலும் புதிய வியாபார வாய்ப்புகளை நோக்கி முயற்சி களை எடுத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் புதிய இரண்டு இடங்களில் உற்பத்தி வசதியை உருவாக்குவதற்கான திட்டங் களும் தீட்டப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெங்களூரில் திட்டமிடப் பட்டுள்ள உற்பத்தி வசதி போஸ்ச் நிறுவனத்துக்கு ஆல்டர்நேட்டர் மற்றும் ஸ்டார்ட்டர் உதிரிபாகங் களை உற்பத்தி செய்து தருவதற்கு நிறுவப்பட உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் வேகத்துக்கேற்ப ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி யும் இருக்கும். எனவே, எதிர்பார்க் கும் அளவைவிட பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தால் இந்தத் தொழிலில் கணிசமான லாபத்தை எதிர்பார்க்க முடியாது எனலாம்.

வாசகர்கள் இந்தப் பங்கை  தொடர்ந்து ட்ராக் செய்து, ஒரு அசாதாரணச் சூழலில் சந்தை இறக்கம் காணும்போது குறைந்த எண்ணிக்கையில் நடுத்தரக் கால முதலீட்டுக்காக (குறைந்தபட்சம் மூன்று வருட முதலீட்டு காலக் காத்திருக்கும் அளவுக்கான முதலீடாக) பரிசீலனை செய்யலாம்.

(இந்தப் பகுதி பங்கு பரிந்துரை பகுதி அல்ல. வாசகர்களின் வசதிக்காக ஒரு பங்கினைப் பற்றிப் பொதுவாகக் கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து வழங்கும் பகுதியாகும்.

இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளரின் தனிப்பட்ட முடிவாகும்!)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick