ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள்! - 40

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பட்டையைக் கிளப்பும் தேங்காய் மட்டை!ஜெ.சரவணன்

தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தேங்காய், இளநீர், துடைப்பம்தான் நமக்குத் தெரியும். ஆனால், தேங்காய் மட்டையிலிருந்து எடுக்கப்படும் நார், கார் இருக்கைகள், படுக்கை மெத்தைகள், சோபா, நாற்காலி போன்ற பொருட்கள், கைவினைப் பொருட்கள், கயிறு போன்றவற்றின் தயாரிப்பில் மிக முக்கியமான பொருளாகவும் உள்ளது. மேலும், இது அதிர்வுகளை தனக்குள் தாங்கிக் கொள்வதால் கண்ணாடி, பீங்கான் போன்ற பொருட்களை பேக்கிங் செய்யும்போது பயன்படுத்து கிறார்கள்.

நார் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் பித்து, தாவரங்கள் வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பித்தில் தாவரங்கள் வளர் வதற்கான ஊட்டச்சத்துக்கள் இருப்ப தோடு, பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று போன்றவற்றிலிருந்தும் தாவரங்களைப் பாதுகாக்கிறது. மொட்டைமாடி தோட்டங்கள் போன்ற வற்றுக்கு பெரும்பாலும் இந்தப் பித்துக் கட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி பல வகைகளில் பயனுள்ள தாகவும் லாபம் தரக்கூடியதாகவும் உள்ளதால், தேங்காய் மட்டை ஏற்றுமதி தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்