இடியாப்ப சிக்கலில் தவிக்கும் ரியல் எஸ்டேட் துறை!

ஹலோ வாசகர்களே..!

ரியல் எஸ்டேட் துறைக்கு பிடித்திருக்கும் கேடு காலம் உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா முழுக்க 3,540 ரியல் எஸ்டேட் திட்டங்களில் சுமார் 75 சதவிகித திட்டங்கள் ஆரம்பிக்க முடியாமலே இருக்கிறது. இதனால் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தத் துறையில் முடங்கிக் கிடப்பதாக அசோசெம் அமைப்பு தன் ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

நாடு முழுக்க பல ஆயிரம் ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடங்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், நிலங்களின் விலை ஏகத்துக்கும் உயர்ந்ததே. புறநகரிலேயே மனைகளின் விலை சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு இருக்கும்போது, நகர்ப்புறங்களில் சில சதுர அடி இடத்தைக்கூட வாங்க முடியாது. நிலத்தின் விலை தற்போது விற்கப்படும் விலையிலிருந்து 40 முதல் 50%  குறைந்தால் மட்டுமே மீண்டும் அதை வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்