கேட்ஜெட்ஸ்

செ.கிஸோர் பிரசாத் கிரண்

சோனி எக்ஸ்பீரியா C5 அலட்ரா டூயல்
(Sony Xperia C5 Ultra Dual)

டிஸ்ப்ளே: 6 இன்ச் 1080x1920 பிக்ஸல்.
பின்புற கேமரா: 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா: 13 மெகா பிக்ஸல்.
பிராசஸர்: 1.7 GHz Octo-Core MediaTek MT6752.
ரேம்: 2 GB. பேட்டரி: 2930 mAh.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 (Sony UI)
இன்டெர்னல் ஸ்டோரேஜ்: 16 GB.
எக்ஸ்டெர்னல்  ஸ்டோரேஜ்: 200 GB வரை.
எடை: 187 கிராம்.
சிம் 1 & சிம் 2: 4G நானோ சிம்.
பிளஸ்: சிறந்த தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன், முன்புற கேமரா.
மைனஸ்: விலை.
விலை: ரூ.29,990

எம்.ஐ USB விசிறி:
(Mi USB Fan)

 குறைந்த விலை கேட்ஜெட்களுக்கு பெயர் போன எம்.ஐ நிறுவனம் தனது புதிய கேட்ஜெட்டான எம்.ஐ USB மின்விசிறியை வெளியிட்டுள்ளது.

 நெகிழ்வான உடலமைப்பை கொண்ட இந்த மின்விசிறியின் எடை குறைவாக இருப்பதோடு பயன்படுத்துவதற்கும் எளிதாக உள்ளது.

 USB பவரைக் கொண்டு இயங்கும் இந்த மின்விசிறியை லேப்டாப், டெஸ்க்டாப், பவர் பேங்க், கார் சார்ஜர் ஆகிய அனைத்து USB போர்ட்களிலும் பயன்படுத்தலாம்.

 முழுக்க முழுக்க சிலிக்கானைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்விசிறி, 25.8db குறைந்த ஒலியை வெளியிட்டு இயங்கும் தன்மையை பெற்றுள்ளது.
 இதன் இந்திய விலை ரூ.249.     

 

ஹெச்பி ஓமன் லேப்டாப்
(HP Omen Laptop)

இது ஒரு மெல்லிய அதிநவீன பிரத்யேகமான கேமிங் லேப்டாப்.

டிஸ்ப்ளே: 15.6 இன்ச் 1920*1280 பிக்ஸல்.
பிராசஸர்: இன்டெல் கோர் i7-4720HQ 2.26GHz – 3.6GHz. 
கிராபிக்ஸ் பிராசஸர்:  NVIDIA GTX 960M 4GB GPU.
ரேம்: 8GB DDR3.
இயங்குதளம்: விண்டோஸ் 8.1. விண்டோஸ் 10 Upgrade உண்டு.
இன்டெர்னல் ஸ்டோரேஜ்: 256GB SSD.
பிளஸ்: மிகக் குறைந்த எடை, டிசைன், தொழில்நுட்பம்.
மைனஸ்: கீ-போர்ட். ஸ்டோரேஜ்.
விலை: ரூ.1,59,990.


சாம்சங் Z3
(Samsung Z3)

டிஸ்ப்ளே: 5 இன்ச் 720x1280 பிக்ஸல்.
பின்புற கேமரா: 8 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா: 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர்: 1.3 GHz Quad-Core Spreadtrum SC7730S.
ரேம்: 1 GB.
பேட்டரி: 2600 mAh.
இயங்குதளம்: Tizen 2.4
இன்டெர்னல் ஸ்டோரேஜ்: 8 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்: 128 GB வரை.
எடை: 137 கிராம்.
சிம் 1–3G மைக்ரோ சிம். சிம் 2–2G மைக்ரோ சிம்.
பிளஸ்: டிஸ்ப்ளே.
மைனஸ்: டிசைன். புதிய இயங்குதளம்.
விலை: ரூ.8,490.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick