கம்பெனி ஸ்கேன்!

க்ருஹ் ஃபைனான்ஸ் லிமிடெட்!டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் கம்பெனி ஸ்கேனிங் பகுதியில் ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் ஹெச்டிஎஃப்சியின் துணை நிறுவனமான க்ருஹ் ஃபைனான்ஸ் லிமிடெட் (NSE SYMBOL: GRUH).

1986-ம் ஆண்டு ஹெச்டிஎஃப்சியும், ஆகாகான் ஃபண்ட் பார் எகனாமிக் டெவலப்மென்ட்டும் சேர்ந்து 1988-ல் ஆரம்பித்ததுதான் இந்த நிறுவனம். தற்சமயம் எட்டு மாநிலங்களில் 171 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். மேலும், 2000-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் முன்னோடியான ஹவுஸிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் (ஹெச்டிஎஃப்சி) நிறுவனத் தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஜுன் 2015 நிலவரப்படி, சுமார் 2,98,860 வீடுகளுக்கான கடன் வசதி களையும் தொடர் கூட்டல் அடிப்படையில் தரப்பட்டுள்ள கடன் தொகை ஏறக்குறைய ரூ.15,989 கோடி  அளவிலும் இருக்கிறது. இதே காலகட்டத்தில் கிராமப்புறங்களில் ரூ.7,129 கோடிக்கு வீட்டு வசதிக் கடன்கள் வழங்கியுள்ளது. ஜூன் 30, 2015 அன்றைய தேதியில் வழங்கப்பட்டு நிலுவையில் இருக்கும் கடன் தொகையின் அளவு ரூ.9,329-கோடியாகவும், ஒரு வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் சராசரி கடனின் அளவு ரூ.5.97 லட்சமாகவும் இருக்கிறது. மொத்த வாராக் கடனின் அளவு சுமார் ரூ.48.54 கோடி(0.52%) அளவிலும், நிகர வாராக் கடனின் அளவு ரூ.13.60 கோடி (0.15%) என்ற அளவிலும் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

2000-ம் ஆண்டில் 28 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் படிப்படியாக விரிவாக்கங் களை செய்து, ஜூன் 2015 இறுதியில் குஜராத், மஹாராஷ்ட்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் என்ற எட்டு மாநிலங்களில் 109 மாவட்டங்களில் 1,004 தாலுகாக்களில் கிளைகளைக் கொண்டு செயல்பட்டு தன் வியாபாரத்தை விமரிசையாக செய்துவருகிறது. இனிவரும் காலத்தில் அனைவருக்கும் வீடு என்கிற திட்டம் உருவானால், அது இந்த நிறுவனத்துக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் கள் பெரும்பாலும் பெரிய அளவில் போட்டி இல்லாத சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நபர்களாவர். அதிலும் கடன் தொகையும் ரூ.10 லட்சத்துக்குக் கீழ் என்ற பிரிவில் கடன் வழங்குதல் என்பது ஒரு தனிப் பிரிவே ஆகும். வங்கிகளின் போட்டி இந்த வகை கடன்களில் இருந்தாலும் சுயதொழில் மற்றும் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருப்போருக்கு கடன் தருவதில், அவர்களுடைய கடனை திருப்பிச் செலுத்தும் திறனை கணக்கிடுவதில் உள்ள சிக்கல்களே பெரியதொரு இடையூறாக இருக்கிறது. இதை நன்கு உணர்ந்த வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் இந்த வகை கடன்களை  முனைப்புடன் வழங்கி வருகின்றன.

ஏற்கெனவே கூறியதைப் போல், வங்கிகள் இந்த வகை வாடிக்கையாளரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை கணக்கிடுதல், வருமானத்தினை அனுமானித்தல் போன்றவற்றில் எதிர்கொள்கின்ற சிக்கல்களினாலும், ஏற்கெனவே அவர்களுக்கு அதிகரித் திருக்கும் வாராக் கடனின் அளவினாலும் இந்த வகை கடன்களை வழங்குவதில் பெரிய அளவிலான போட்டியைத் தவிர்த்தே வருகின்றன. இந்த வகை கடன்களைவிட சுலபத்தில் அனுமானிக்கக்கூடிய வகையிலான மாதாந்திர சம்பளத்தில் வேலையில் இருக்கும் நபர்களுக்கான கடன்களை வழங்குவதிலேயே வங்கிகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

மேலும், இந்த வகை கடனாளிகள் நகர்ப்புறங்களிலேயே தங்களுடைய சொத்துக்களை அமைத்துக் கொள் வதால், சொத்துக்களை மதிப்பிடுதல் மற்றும் வில்லங்கங்களை சரிபார்த்தல் போன்ற விஷயங்களும் வங்கிகளுக்கு சுலபமானதொரு விஷயமாக இருக்கிறது. இவைகளைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருக்கும் சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பில் செயல்படும் சரியான மற்றும் கடன் வழங்குவதற்கு தகுதியான வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு வழங்குவதில்தான் இந்த நிறுவனம் செயல்படும் செக்மெண்டின் சிறப்பே இருக்கிறது.

மேலும், வேகமான வளர்ச்சியைக் காணும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கும் சம்பள விகிதங்கள், வருமான வரியில் தொடர்ந்து வீட்டுக் கடனுக்கு தரப்பட்டு வரும் சலுகைகள், அதிகமாகிக்கொண்டே போகும் கூட்டுக் குடும்பங்கள் இல்லாத நிலை போன்றவையும் இதுபோன்ற சிறு வீட்டுக் கடன் வழங்குதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. வீட்டு அடமானக் கடன் சந்தை கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகவே கணிசமான அளவில் வளர்ந்து கொண்டே வருகிறது. வீட்டுக்கான தேவைகளுமே கணிசமான அளவில் அடுத்த ஏழு ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

ஒரு நிதி நிறுவனம் என்ற வகையில், ஜூன் 2015-ல் முடிந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங், பொதுமக்கள் டெபாசிட்டுகளுக்கு கிரிசில் வழங்கும் ‘எஃப்ஏஏஏ’ மற்றும் இக்ரா வழங்கும் ‘எம்ஏஏஏ’ ரேட்டிங்குகளை கொண்டிருந்தது.  இந்த வகை ரேட்டிங்குகள் ஒரு கணிசமான அளவிலான மதிப்பை இந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாக்குகிறது எனலாம்.

சிறிய வகை வீட்டு வசதிக் கடன்கள், சிறிய ஊர்கள் என்பதையே தன்னுடைய சிறப்பு உத்தியாகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். அதிலும் இந்த நிறுவனம் ஏற்கெனவே கால் பதித்திருக்கும் மாநிலங்களில் வீட்டு வசதிக்கான தேவை அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது என்றே எதிர்பார்க்கும் நிலைமை தென்படுகிறது. கடன் களுக்கான வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதிலும் நூதனமான மற்றும் குறைந்த செலவுகளை மட்டுமே (குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் மற்றும் அதிக உற்பத்தித்திறனுடைய பிசினஸ் மாடல்) ஏற்படுத்தக்கூடிய உத்திகளை இந்த நிறுவனம் கடைப் பிடித்து வருகிறது.

 ரிஸ்க் ஏதாவது உண்டா?

பொதுவாக, பொருளாதாரம் சுணக்கம் ஏற்பட்டால் இந்த துறையின் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. அதிலும் சுய தொழில் மற்றும் சுய வேலை வாய்ப்பு கொண்டிருப்பவர் களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் என்பதால், இந்த வகை பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கும். 

இந்தப் பங்குகளின் விலை செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பைக் கொண்டே இருக்கும். செயல்பாட்டில் சற்று தொய்வு விழுந்தால்கூட, பங்குகளின் விலையில் அதன் பாதிப்பு உடனுக்குடன் வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். நிதி நிறுவனங்கள் அரசாங்க மற்றும் அந்த நிறுவனம் செய்யும் தொழில் சார்ந்த ரெகுலேட்டர்கள் (நேஷனல் ஹவுஸிங் பேங்க், மத்திய ரிசர்வ் வங்கி போன்றவை) சொல்லும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே நடக்கவேண்டியிருக்கும். வேகமான வளர்ச்சி வரும்போது நிதித் தேவைகளுக்காக (ரீஃபைனான்ஸ் மற்றும் வங்கிக் கடன் போன்ற வசதியையும் தாண்டி) பொதுமக்களிடமிருந்து வைப்பு நிதி மற்றும் ஏனைய கடன் பத்திரங்கள் வழியாக பணம் திரட்டும்போது வட்டி சற்று அதிகமாகலாம்.

ரிஸ்க்குகள் இருக்கிறபோதிலும் வீட்டு வசதிக் கடனில் நீண்ட அனுபவம் உடைய ஹெச்டிஎஃப்சியின் துணை நிறுவனம் என்பதாலும், இந்த நிறுவனம் செயல்படும் செக்மெண்டில் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருப்பதாலும் சந்தை சரியானதொரு இறக்கத்தை சந்திக்கும்போது இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிந்தால் குறைந்த எண்ணிக்கையில் மூன்று முதல் ஐந்து வருட முதலீட்டுக்காக வாசகர்கள் இந்தப் பங்கை வாங்குவதற்காக ட்ராக் செய்யலாம்.


This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol (GRUH)/name of company/time duration)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick