ஷேர்லக்: வேகம் எடுக்கும் இடிஎஃப் முதலீடு!

காலை முதலே சென்னை முழுக்க பரவலாக மழை... சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் தேங்கி இருந்ததால், வீட்டிலேயே தங்கிவிட்டார் ஷேர்லக். அங்கிருந்தபடி நமக்கு போன் செய்து செய்திகளை சொன்னார். முதலில் வழக்கம்போல பங்குச் சந்தையின் போக்கு பற்றி கேட்டோம்.

‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி மூடீஸ் நிறுவனம் மிக பாசிட்டிவ்வாகச் சொல்லி இருக்கிறது. ஜி20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சிதான் மிக அதிகமாக இருக்கும் என அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7-7.5 சதவிகிதமாக இருக்கும் என அது குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரத்தைப் போலவே, இந்த வாரத்தில் எஃப்ஐஐகள் நம் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். கடந்த திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 1,700 கோடி ரூபாய்க்கு மேல் புதிதாக முதலீடு செய்திருக்கிறார் கள். நம் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்