அரசு அதிகாரிகளுக்கும் அக்கறை வேண்டாமா?

ஹலோ வாசகர்களே..!

லக அளவில், பிசினஸ் செய்வதற்கான சூழல் குறித்த பட்டியலில் (Ease of Doing Business) இந்தியா 130-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக வங்கி யானது கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் நம் நாடு 142-வது இடத்தில் இருந்தது. (பின்னர் திருத்தி வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 134-வது இடத்துக்கு முன்னேறியது!) மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த ஆண்டு நம் நாடு கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறது.

இந்த வளர்ச்சி மகிழ்ச்சியைத் தந்தாலும் இந்தப் பட்டியலில் முதல் 100 இடத்தில் நம் நாட்டை இடம்பெற வைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்து பாடுபட்டு வருகிறது. நாட்டு வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருவதற்கு சிறந்த உதாரணம் மாதமொருமுறை அவர் நடத்தும் ‘பிரகதி’ என்கிற வீடியோ கான்ஃபரன்சிங் கூட்டம். இந்த கூட்டத்தில் இந்தியா முழுக்க பல்வேறு காரணங்களினால் தடைபட்டுக் கிடக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடர்புடைய அதிகாரி களிடம் பேசி, மீண்டும் அவற்றை செயல்பட வைக்கும் பணியை செய்து வருகிறார் பிரதமர். பல ஆண்டுகளாகச் செயல்படாமல் கிடந்த திட்டங்கள், இதன் மூலம் மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது. ஏறக்குறைய 60 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்கள் இந்தக் கூட்டம் மூலம் மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்