வெற்றியோ தோல்வியோ, வளர்ச்சிதான் முக்கியம்!

ஹலோ வாசகர்களே..!

ந்த தலையங்கத்தை வாசகர்கள் படிக்கிற நேரத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தால், அதை பெரிய நிகழ்வாக கருதத் தேவையில்லை. அதே சமயம், வெற்றி பெற்றாலும் அது பெரிய விஷயமாக இருக்காது. காரணம், இது ஒரு சட்டமன்றத் தேர்தல் மட்டுமே. பீகாரில் வெற்றி பெறுவதினால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி வேகமெடுத்துவிடாது.

இன்றைய நிலையில் நம் நாட்டின் வளர்ச்சியானது மத்திய அரசாங்கம் எடுக்க இருக்கும் பொருளாதார சீர்திருத்தங்களைப் பொறுத்தே இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி 24% சரிவு, ஜிடிபி-ல் மத்திய அரசின் செலவினங்கள் 17 சதவிகிதத்தில் இருந்து (2010) 13.5 சதவிகிதமாக தற்போது குறைந்திருப்பது, 2015-ன் முதல் காலாண்டில் 64,000 வேலை வாய்ப்புகளே உருவாகியிருப்பது, தனியார் தொழில் முதலீடுகள் வளர்ச்சி காணாதது, வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பு போன்றவை எல்லாம் நம் பொருளாதாரம் மிகப் பெரிய தேக்கத்தில் இருப்பதையே காட்டுகிறது.  பல கோடி இளைஞர்கள் இருக்கும் ஒரு நாட்டில் வெறும் 64 ஆயிரம் புதிய வேலைகள் என்பது யானைப் பசிக்கு சோளப்பொரியாக மட்டுமே இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்