தொழில்முனைவோர்களுக்கு கைகொடுக்கும் இலக்கியப் பட்டறை!

சித்தார்த்தன் சுந்தரம்

லக்கியத் திருவிழா பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், வணிக இலக்கியங்களுக்கென ஒரு திருவிழா சமீபத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக பெங்களூருவில் உள்ள செஞ்சுரி க்ளப்பில் நடந்தது.  இந்த ஒருநாள் திருவிழாவில் தொழில், நிதி, மார்க்கெட்டிங், லீடர்ஷிப், தொழில்முனைவோர் சம்பந்தப்பட்டப் புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் `பிங் பேப்பர்’ என அழைக்கப்படும் வணிகப் பத்திரிகையாளர்கள், மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவின் சேர்மன் ரகுநாதன் (சிஇஓ – ஜிஎம்ஆர் வரலட்சுமி ஃபவுண்டேஷன்) தொடக்க உரையில், ‘‘சீனாவில் வருடத்துக்கு 4,40,000 புத்தகங்களும், அமெரிக்காவில் 1 மில்லியன் புத்தகங்களும் (இதில் 75%  புத்தகங்கள் புத்தக ஆசிரியர்களே பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் – அதாவது, Self-Publishing), இங்கிலாந்தில் 1,84,000 புத்தகங்களும் வெளியானது. ஆனால், இந்தியாவில் வெளியான புத்தகங்களின் எண்ணிக்கை வெறும் 90,000 மட்டுமே. அதிலும் மொழிவாரி யாகப் பார்த்தால், 25% புத்தகங்கள் ஆங்கிலத்திலும், 25% இந்தியிலும், 50%  மற்ற மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது. அதிலும் மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் பிசினஸ் புத்தகங்கள் வெளியாகி இருக்கிறது. தொழில் சார்ந்தோர் புத்தகம் எழுத முன்வராதது இதற்கு முக்கிய காரணம்’’ என்றார் அவர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்