ஷேர்லக்: 2016-க்குள் சென்செக்ஸ் 35000...

விகடன் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை எல்லா ஊழியர்களும் உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், ஷேர்லக்கிடமிருந்து நமக்கு போன் வந்தது. தி.நகரில் தீபாவளி ஷாப்பிங் முடித்த கையுடன் நம்மை சந்திக்க வரலாமா என்று கேட்டார் ஷேர்லக். சொன்னபடி வந்து சேர்ந்தவரிடம் சரவெடியாக நம் கேள்விகளை கொளுத்திப் போட்டோம். வழக்கம் போல சந்தையின் போக்குப் பற்றி நம் முதல் கேள்வி இருந்தது.

‘‘சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் நிறுவனங்கள் ஐபிஓ மூலம் கணிசமான தொகையை திரட்டி வருவது பாசிட்டிவ் ஆன விஷயமாக இருக்கும். 2015-ம் ஆண்டில் இதுவரைக்கும் ஐபிஓ மூலம் ரூ.10,756 கோடி திரட்டப்பட்டிருக்கிறது. 2014 முழு ஆண்டில் வெறும் ரூ.1,508 கோடிதான். உரிமைப் பங்கு வெளியீடு மூலம் 2015-16-ம் நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.20,874 கோடி திரட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை, முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 11% அதிகம். சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இப்போது 26250 என்கிற அளவில் இருக்கும் சென்செக்ஸ் 2016-க்குள் 35000-ஆக அதிகரிக்கும் என சொசைட்டி ஜெனரல் நிறுவனம் கணித்துள்ளது. வரும் காலத்தில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் அதிகரிப்பதால், சந்தை ஏற்றத்தில் இருக்கும் என அது குறிப்பிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்