பல் இல்லாத பாம்பைக் கண்டு யாருக்கு பயம்?

ஹலோ வாசகர்களே..!

நாடு முழுக்க நடக்கும் மோசடி நிதி திட்டங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் இறங்கி இருப்பது உள்ளபடி வரவேற்கத்தக்கதே. தற்போதுள்ள நிலையில், ஒவ்வொரு வகையான நிதி மோசடியையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஒவ்வொரு அமைப்பிடம் இருக்கிறது. மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொடர்பான மோசடிகளை அந்தந்த மாநில அரசாங்கமும், மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி கூட்டாக முதலீடு செய்யும் திட்டம் எனில், அதை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியும் விசாரிக்க முடியும்.

மோசடிகளை விசாரிக்கும் அமைப்புகள் இப்படி பிரிந்து கிடப்பதால்,   பாதிப்புக்குள்ளாகும் மக்கள், எந்த அமைப்பிடம் புகார் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். செபியின் கறாரான உத்தரவுக்குப் பிறகும் பிஏசிஎல் என்கிற மோசடி நிறுவனம் சுமார் ரூ.45,000 கோடியை மக்களுக்கு திரும்பத் தராமலே  உள்ளது.  மதுரை எம்ஆர்டிடி நிறுவனம் பல நூறு கோடி ரூபாயை மக்களிடமிருந்து வசூலித்து, அதை திரும்பத் தராமலே இருக்கிறது. தவிர, பல மோசடி நிறுவனங்கள் இன்றும் நாடு முழுக்க செயல்பட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்