தவறுகளை இனியாவது திருத்திக்கொள்வோம்!

ஹலோ வாசகர்களே..!

சில நாட்கள் பெய்த பெருமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு எவ்வளவு என்பது பற்றி இப்போது கணக்கெடுக்கத் தொடங்கி இருக்கிறது தமிழக அரசாங்கம். பாதிப்பை மட்டும் அறிந்துகொண்டால் போதுமா, பாதிப்புக்கான மூலகாரணத்தை அறிந்துகொள்ள என்ன செய்யப்போகிறது?

இப்படியொரு பெருவெள்ளம் ஏற்பட முதல் காரணம், நமது மாநில அரசாங்கம்தான். கடந்த சில பத்தாண்டுகளில் நகர்ப்புறமயமாக்கலை ஊக்கப்படுத்திய நம் மாநில அரசாங்கங்கள், அதை திட்டமிட்டு நிறைவேற்றவில்லை. நகரங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படும்போது கண்ணை மூடிக்கொண்டு அனுமதி அளித்தன. இதனால் அரசியல்வாதிகள் தங்கள் உபதொழிலாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களை தொடங்கி, கிடைத்த இடங்களில் எல்லாம் நிலங்களை கூறுபோட்டு விற்றனர். மழை நீர்கூட செல்லவிடாமல்  கட்டடங்களைக் கட்டியதால், இன்று  நிலம் முழுக்க மழை நீராக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்