கம்பெனி ஸ்கேன்: ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்!

(NSE SYMBOL: AEGISCHEM)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் லாஜிஸ்டிக்ஸ் துறையில் செயல்படும் ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் (Aegis Logistics Ltd)  நிறுவனத்தைதான். 1956-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1978-ம் ஆண்டில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட நிறுவனம் இது.

லாஜிஸ்டிக்ஸ் துறையின் செயல்பாடு களை ஐந்து பெரிய பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கடல்வழி, ரயில் வழி, வான் வழி, தரைவழி மற்றும் மூன்றாம் நபர் சார்ந்த லாஜிஸ்டிக்ஸ் என பொதுவாக பிரிக்கலாம். இந்தத் துறையில் இருக்கும் இந்திய தொழில் நிறுவனங்கள் சாலை வழியாக சரக்கு கொண்டு செல்லுதல் (ரோட் ஃப்ரைட்), அதிவேக லாஜிஸ்டிக்ஸ் (எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ்), திரவப் பொருட்களை கொண்டு செல்லுதல் (லிக்யுட் லாஜிஸ்டிக்ஸ்), கன்டெய்னர் லாஜிஸ்டிக்ஸ் (கன்டெய்னர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சேர்த்தல், உள்நாட்டு கன்டெய்னர் மையங்கள் (டெப்போ), கன்டெய்னர் ஃப்ரைட் ஸ்டேஷன்கள், மல்டி மோடல் டிரான்ஸ்போர்ட் ஆப்ரேட்டர் (MTO) போன்ற உட்பிரிவுகள் கொண்டது) போன்ற பல பிரிவுகளில் செயலாற்றுகின்றன. இதில் தேர்ட் பார்ட்டி லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் எனும் சேவை அளிக்கும் நிறுவனங்கள் மேலே குறிப்பிட்ட பல விதமான சர்வீஸ்களையும் ஒருங்கிணைத்துவாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்