கம்பெனி ஸ்கேன்: லூபின்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங்கிற்கு எடுத்துக்கொண்டிருக்கும் நிறுவனம் ஒரு பூவின் பெயரைக் கொண்டிருக்கும் நிறுவனமாகும். இந்தப் பூ தன்னை வளர்க்கும் மண்ணிற்கு வளம் சேர்க்கக்கூடியது. அதுமட்டுமல்லாது மோசமான மண்வளம் மற்றும் தட்பவெப்ப சூழல் நிலவும் இடத்திலும் அதனையெல்லாம் தாங்கியும் தாண்டியும் வளர்ந்து மண்ணுக்கும் மனிதருக்கும் பலன் தரக்கூடிய வகையில் செயல்படவல்லது.

இந்த வகை குணம்கொண்ட ‘லூபின்’ என்ற மலரின் பெயரைக் கொண்டிருக்கும் நிறுவனமான லூபின் லிமிடெட் (NSE SYMBOL: LUPIN) எனும் பார்மெச்சூட்டிகல் நிறுவனத்தைத்தான் இந்தவாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகின்றோம். டாக்டர் தேஷ் பந்து குப்தாவால் ஆரம்பிக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வரும் நிறுவனம் இது. கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு ஆண்டு காலமாக செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் சிறப்பான  தொழில்முனையும் குணாதிசயத்துடனும், புதுமைகள் பலவற்றை செய்யும் திறனுடனும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய பலவிஷயங்களுக்கு அடிகோலும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்