பிசினஸ் சீக்ரெட்ஸ் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில்முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

ரு நிறுவனத்துக்கு மிகப் பெரிய சொத்து என்றால் அது  அந்த நிறுவனத்தில்  வேலை பார்க்கும் ஊழியர்கள்தான். ஒரு நிறுவனத்துக்கு என்னதான் பணமும் திறமையும் இருந்தாலும், ஊழியர்கள்தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் அடிப்படையாக இருக்கிறார்கள். அவர்கள் நல்ல மனநிலையில் வந்து வேலை பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி காணும். இதற்குத் தேவையான விஷயங்களை ஒரு நிறுவனத்தை நடத்துகிறவர் நிச்சயம் செய்துதர வேண்டும்.

ஒருவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் எனில், அவருக்கு நல்ல சம்பளம் தரவேண்டும். ஆனால், சம்பளம் மட்டுமே பிரதான விஷயமாக பல ஊழியர்கள் நினைப்பதில்லை. ஒரு நிறுவனத்தில் சூழல் எப்படி இருக்கிறது, வேலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையெல்லாம் இந்தக் காலத்தில் கட்டாயமாகப் பார்க்கிறார்கள். குறிப்பாக, தாங்கள் செய்கிற வேலைக்கு மரியாதை கிடைக்கிறதா என்று பார்க்கிறார்கள். எனவே, நியாயமான சம்பளத்தைப் பெறுகிற அதே நேரத்தில், அவர்கள் மனநிறைவுடன் வேலை பார்க்கிறார்களா என்பதை நிறுவனத்தை நடத்துகிறவர்கள அவசியம் கவனிக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்