புதிய சாலைகளை அமைப்பதில் ஊழலா?

ந்தியா முழுக்க நிறைவேற்றப்படும் சாலைத் திட்டங்கள் குறித்து கிரிசில் நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டு, புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. நாடு முழுக்க நிறைவேற்றப்படும் சாலைத் திட்டங்களில் ஏறக்குறைய 53% திட்டங்கள் ரிஸ்க்கானவையாக மாறியிருப்பதாக எச்சரிக்கிறது அந்த ஆய்வறிக்கை. இந்த திட்டத்துக்கு அளிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப வருமா என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் செயலாளர், ‘புதிய சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கு வங்கிகள்  கடன் தரும்முன், சரியாக ஆராய்ந்து பார்க்கவில்லை. இது ஒரு ஊழல்தான். சாலைகளை அமைக்க தேவையான நிலத்தை அரசாங்கம் தரும் முன்பே, வங்கிகள் எப்படி கடன் தந்தன? வங்கிகள் செய்த தவறுக்கு அரசாங்கம் ஏன் உதவ வேண்டும்?’ என்று சாடியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்