ஷேர்லக்: செபியின் அடுத்த தலைவர்..?

‘வியாழன் இரவு பெய்த மழையினால், லேசான காய்ச்சல்...’ என்று ஷேர்லக்கிடமிருந்து எஸ்எம்எஸ் வரவே, செய்திகளைக் கேட்க  அவரை போனில் தொடர்புகொண்டோம். இருமலும் ஜலதோஷத்துக்கும் இடையே நமக்கு பல செய்திகளையும் சொன்னார். சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், பல நிறுவனங்கள் துணிச்சலாக ஐபிஓவை வெளியிட்டு இருக்கிறதே? என்று நம் முதல் கேள்வியைக் கேட்டோம்.

‘‘இந்திய பங்குச் சந்தை நீண்ட காலத்தில் லாபகரமாக இருக்கும் என்கிற கணிப்பில் நம் முதலீட்டாளர்கள் ஆர்வமாக முதலீடு செய்துவருவதே காரணம். இந்தியாவின் மிகப் பெரிய காபி செயின் நிறுவனமான காபி டே, ரூ.1,150 கோடி மதிப்புக்கு பொதுப் பங்குகளை வெளியிடுகிறது. இதற்கு அக்டோபர் 14-ம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ ஐபிஓ மூலம் ரூ.2,500 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ தீபாவளிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, இன்டர்குளோப் ஏவியேஷன் (ரூ.2,500 கோடி), லார்சன் அண்ட் டூப்ரோ இன்ஃபோ (ரூ.2,000 கோடி), ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் (ரூ.1,500 கோடி), ரத்னாகர் பேங்க் லிமிடெட் (ரூ.1,500 கோடி) இன்னும் எட்டு நிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டத்  திட்டமிட்டுள்ளன’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்