வங்கிகளே கறுப்புப் பணத்தை கடத்தலாமா?

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா மூலம் ஏறக்குறைய 6,172 கோடி ரூபாய் கறுப்புப் பணம் ஹாங்காங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட செய்தி வங்கிகள் மீது சாதாரண மனிதர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை  சுக்குநூறாக உடைத்திருக்கிறது. இதை முழுமையாக ஆராயும்படி சிபிஐயிடம் கேட்டிருக்கிறது  நிதி அமைச்சகம்.

ஒரு நாட்டின் முதுகெலும்பு பொருளாதாரம் எனில் அதில் மிக முக்கியமான பாகமாக இருப்பது வங்கிகள்தான். மக்களின் பணப் பரிவர்த்தனையை சுலபமாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடிப்பதில் வங்கிகள்தான் பிரதான இடம் வகிக்கின்றன. வங்கிப் பரப்புக்குள் வராத மனிதன், வாழ்க்கையில் வளமடைய முடியாது என்பதால்தான், பட்டிதொட்டிகளிலும் வங்கிக் கிளைகள் திறக்க   அரசாங்கமே பல முயற்சிகளை எடுத்து வருகிறது. எல்லோருக்கும்  நிதிச் சேவை (Financial Inclusion)  சென்று சேர வேண்டும் என்பதால்தான், பிரதமர் மோடி  தொடங்கிய ஜன் தான் திட்டம் அதிமுக்கியத்துவம் பெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்