கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ச்சா எண்ணெய்யின் போக்கு குறித்து ஆனந்த்ரதி நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா பிரிவின் கமாடிட்டி மேலாளர் கார்த்திகேயன் ராமநாதன் விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!

ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வார வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக ரூ.3,061-க்கும், அதிகபட்சமாக ரூ.3,120-க்கும் எம்சிஎக்ஸ் சந்தையில் வர்த்தகமானது.

கடந்த வியாழன் வர்த்தகத்தில் சிறிய ஏற்றம் கண்டது. ஆனால், சீனாவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை உயர்த்தும் விதமாக யுவானின் மதிப்பை தொடர்ந்து குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி அடையும். இதனால் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கக் கூடும்.

ஆனால், இந்த விலை உயர்வு தற்காலிக மானதுதான். அதாவது, வரும் வாரத்தில் ஏதாவது வர்த்தகத் தினத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை ரூ.3,200-க்கு மேல் வர்த்தகம் முடிந்தால், மேலும் ரூ.100 விலை உயர வாய்ப்புள்ளது.

வரும் வாரத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையானது ரூ.2,850 - 3,350-க்கு வர்த்தகமாக வாய்ப்புள்ளது.  யுவானின் மதிப்புக் குறைவு; ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்காது என்ற தகவல் வெளியானதே இதற்கு காரணம்.  அமெரிக்க வேலைவாய்ப்பு விவரம் எதிர்பார்த்ததைவிட குறைந்ததால் அமெரிக்கா வட்டியை உயர்த்தும் முடிவை தள்ளிப் போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தங்கம்!

கடந்த திங்கள்கிழமை வர்த்தகத்தில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,147 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால், கடந்த வெள்ளி அன்று 1,128 டாலர் அளவில் வர்த்தகமானது. இதற்கு முக்கியக் காரணம், ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்து வைத்திருப்பதுதான்.

இதன் விளைவாக, யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்தது. கடந்த வெள்ளியன்று வெளியான அமெரிக்க வேலை வாய்ப்பு விவரங்கள் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.  ஏப்ரல் 2008-க்கு பிறகு தற்போது தான் வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகமாக குறைந்துள்ளது. ஃபெட்ரல் ரிசர்வ் வங்கியின் அடுத்தக் கூட்டம் செப்டம்பர் 16, 17-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்பது கேள்விக்குறியே.

அதேநேரத்தில் பணவீக்க விகிதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதால், ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.  தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை சரிந்து வருவது எமர்ஜிங் சந்தைகளில் மந்தநிலையை ஏற்படுத்தி உள்ளது.  வரும் வாரத்தில் தங்கம் விலையில் அதிக இறக்கம் இருக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கலாம். 

கரன்சி!

கரன்சி வர்த்தகம் வரும் வாரத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா சிமென்ட் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ கே.சுரேஷ் கூறுகிறார்.

“கடந்த வெள்ளிகிழமை வெளியான அமெரிக்க வேலைவாய்ப்பு விவரம் எதிர்பார்த்ததைவிட குறைந்துள்ளதால், அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு குறைவே.  அமெரிக்க சந்தைகள் சரிவில் உள்ளதால், இந்திய சந்தையில் முதலீடு செய்ய எஃப்ஐஐகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் . இதனால் ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்புள்ளது.  மேலும் சீனா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால், அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தாது என்ற கருத்தும் நிலவுகிறது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்புய் 66.00-லிருந்து  66.50-க்குள் வர்த்தகமாகும்.”

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

இரா.ரூபாவதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick