கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ந்த வாரம் மென்தா ஆயில் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் இன்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டீவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டலத்தின் மேலாளர் முருகேஷ்குமார்

மென்தா ஆயில் (Mentha oil)

கடந்த சில வாரங்களாகவே மென்தா ஆயில் விலையானது குறைந்து வர்த்தகமாகி வருகிறது. ஆனால், இனிவரும் வாரங்களில் விலை வீழ்ச்சி தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குக் காரணம், மென்தா ஆயில் மீதான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு தான். சமீபத்திய அறிக்கையின் படி, கடந்த 2014-15-ம் ஆண்டில் இலக்கை தாண்டி 23% அதிகரித்து, 25,750 டன் அளவுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது.

2013-14-ம் ஆண்டில் 24,500 டன் அளவுக்கு ஏற்றுமதி ஆகியிருந்தது. வரத்து குறைவு மற்றும் உற்பத்திக் குறைவு போன்ற காரணங்களால் வரும் வாரங்களில் விலை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள் (Turmeric)

வருகிற பருவத்தில் மஞ்சள் உற்பத்தி அளவு அதிகமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு காரணமாக கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தக மானது. இதனால் முக்கியச் சந்தையான ஈரோடு மண்டியில் ஒரு குவிண்டால் 200 ரூபாய் வரை விலை குறைந்து காணப்பட்டது.

மஞ்சள் விலை குறைந்ததற்கு  தரம் குறைந்த மஞ்சள் வரத்து காணப்பட்டதும் ஒரு காரணமாகும். அதே சமயம் சேலம் ஹைபிரிட் வகை மஞ்சள் தேவையானது அதிகரித்து காணப்பட்டது. அந்த வகை மஞ்சளின் விலை மட்டும் உயர்ந்து குவிண்டாலுக்கு 8,700 ரூபாய் வரை வர்த்தகமானது. ஆனால், இந்த வகை மஞ்சள் வரத்து மொத்தம் 100 பைகள் மட்டுமே காணப்பட்டன. மற்ற மஞ்சள் ரகங்களில் விரலி மஞ்சள் 7600 ரூபாய்க்கும், ரூட் மஞ்சள் 7,400 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவரப்படி, என்சிடிஇஎக்ஸ் கிடங்குகளில் 12,436 டன் மஞ்சள் இருப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிகழ்வதாலும், உற்பத்தி அதிகரிக்கும் என்பதாலும் வரும் வாரங்களில் மஞ்சள் விலை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோயாபீன் (Soybean)

கடந்த வாரத்தில் சோயாபீன் வர்த்தக விலையானது வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்தில் காணப்பட்டாலும், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவு போன்ற காரணங்களா லும், சந்தைக்கு வரத்து அதிகரித்து காணப்படுவதாலும் விலை குறைந்து வர்த்தகமானது. ஒரு குவிண்டால் சோயாபீன் குறைந்தபட்சம் 3,260 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 3,280 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

வேளாண்மை அமைச்சகத் தின் அறிக்கையில் நடப்பு பருவத்தில் சோயாபீன் விளைச்சல் 5.2% அதிகரித்து 115.4 லட்சம் ஹெக்டேராக காணப்படுகிறது. நவம்பர் கான்ட்ராக்ட் விலையானது ஏற்றுமதி தேவை குறைந்து காணப்படுவதால், விலை குறைந்து வர்த்தகமானது.

அமெரிக்காவில் விளையும் சோயாபீன் விளைச்சலானது 63% சிறப்பானதாக காணப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் சோயாபீன் வரத்து அதிகரிக்கும் என்பதால், வரும் வாரங்களில் விலை குறைந்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரகம் (Jeera )

ஏற்றுமதி தேவை அதிகரித்து காணப்படுவதாலும், உள்நாட்டுத் தேவையும் அதிகரித்திருப்ப தாலும் கடந்த வாரம் ஜீரகத்தின் விலையானது அதிகரித்து காணப்பட்டது. மேலும், தற்போது பெய்திருக்கும் கன மழையால் பயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இனிவரும் பருவத்தில் ஜீரகத்தின் விளைச்சல் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 8-ம் தேதி நிலவரப்படி, என்சிடிஇஎக்ஸ் சந்தைக் கிடங்கில் உள்ள இருப்பு அளவு 10,971 டன்னாகும். இனி வரும் வாரங்களில் ஜீரகம் உற்பத்தியாகும் ஏரியாக்களில் இருந்து சந்தைக்கு வரும் வரத்து குறைந்தால் விலை மேலும் அதிகரிக்கலாம்.  

குஜராத் சந்தையில் 20 கிலோ ஜீரகம் ரூ.2,500 - 3,400 வரையிலும், ராஜ்கோட் சந்தையில் 20 கிலோ ஜீரகம் ரூ.15 விலை அதிகரித்து, ரூ.2,300 - 3,300 வரை வர்த்தக மானது. ஜீரகத்தின் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் ஒரு குவிண்டால் ரூ.80 விலை அதிகரித்து, ரூ.16,220-க்கு  வர்த்தக மானது.

செ.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick