வெறும் அறிவிப்புடன் நின்றுவிடக் கூடாது!

லக முதலீட்டாளர் மாநாடு மிகப் பெரிய வெற்றி கண்டிருப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசாங்கம். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.2,42,160 கோடி முதலீடு... உற்பத்தித் துறையில் மட்டும் ரூ.1,04,286 கோடி முதலீடு, எரிசக்தி துறையில் ரூ.1,07,136 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அரசாங்கம் சொல்வதைக் கேட்டு, அப்பாவித் தமிழன் அதிர்ந்து போயிருக்கிறான். 

ஆனால், இந்த அறிவிப்புகள் எல்லாம் தமிழகத்தில் உண்மையான தொழில் வளர்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணத்தில் விடுக்கப்பட்டதா அல்லது சட்டமன்ற தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் நாடகமா என்கிற கேள்வி, விஷயம் தெரிந்த முதலீட்டாளரின் மனதில் எழாமல் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்