வட்டியைக் குறைத்தால் வளர்ச்சி வந்துவிடுமா?

ப்போதைக்கு வட்டி உயர்வு இல்லை என அமெரிக்கா அறிவித்துவிட்ட நிலையில், ஆர்பிஐ கவர்னர் வட்டி விகிதத்தைக் குறைப்பாரா என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை  ஒரு கூட்டத்தில் பேசிய ஆர்பிஐ கவர்னர், ‘‘நம் நாடு வேகமான வளர்ச்சி காண்பது சாத்தியம்தான். ஆனால், அதற்கு பணவீக்கம் என்கிற மிகப் பெரிய விலையை தந்தாக வேண்டும்’’ என்று கூறி்யிருப்பது  வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதையே சுட்டிக் காட்டுவதுபோல் தெரிகிறது.

கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு, மானியங்கள் போன்ற சலுகைகளை தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்காமல், வளர்ச்சிக்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருப்பதும் சரியான கருத்தே. குறைந்த வட்டியை மட்டுமே  எதிர்பார்க்கும்  தொழில் நிறுவனங்கள், பிசினஸை வளர்க்குமா என்பது சந்தேகமே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்