கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ஜெ.சரவணன்

* அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து தங்கள் உற்பத்தியை அதிகரித்தபடி இருந்தால் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் பழையபடி குறையத் தொடங்கிவிடும்.

* அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் அமெரிக்க வட்டி விகிதம் ஆகியவை தங்கம் வர்த்தகத்திற்கு எதிரான சென்டிமென்டை சந்தையில் ஏற்படுத்துவதால் வரும் வாரத்திலும் தங்கத்தின் வர்த்தகம் இறக்கத்திலேயே நீடிக்கும். 

கச்சா எண்ணெய்!


கடந்த வாரத்தில் பெல்ஜியம் நாட்டின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பும் கச்சா எண்ணெய் விலைப் போக்கை பாதித்தது. இதனால் கடந்த வாரத்தில் திங்கட்கிழமை அன்று 41 டாலருக்கு மேல் வர்த்தகமான பேரல் கச்சா எண்ணெய் புதன்கிழமை அன்று ஒரு சதவிகிதம் குறைந்து 39.46 டாலருக்கு இறங்கியது. மேலும், அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் இருப்பை கடந்த செவ்வாய் அன்று 90 லட்சம் பேரல்கள் கூடுதலாக சேர்த்து வைத்தது. இதனால் கடந்த வாரத்தில் அதிகபட்ச இருப்பாக அது பதிவானது. ஈரான் மீதான தடையை நீக்கிய பிறகு அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல் உயர்ந்து 22 லட்சம் பேரலாக உள்ளது. இப்படி கச்சா எண்ணெய்யின் சப்ளை அதிகரித்ததும், அமெரிக்கா தனது இருப்பை அதிகரித்து கொண்டதோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதும்தான் கச்சா எண்ணெய்யின் விலை குறையக் காரணமாக அமைந்தது. அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து தங்கள் உற்பத்தியை அதிகரித்தபடி இருந்தால் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் பழையபடி குறையத் தொடங்கிவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்