கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

ஜெ.சரவணன்

* வரும் பருவத்தில் மழைக் குறைவு காரணமாக மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

* ஜீரகத்துக்கான வரவேற்பும் தேவையும் இருப்பதால், வரத்து அதிகரித்தாலும் பெருமளவில் விலை குறைவதற்கு வாய்ப்பிருக்காது.

* புதிய கொத்துமல்லி வரத்து சந்தைக்கு வரவிருப்பதால் விலை உயர்வு கட்டுக்குள் இருக்கும்!

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. ஏலக்காய் வரத்து அதிகரித்திருந்த நிலையில், ஏலக்காய்க்கான தேவை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லாததே விலை குறையக் காரணம். தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், ஏலக்காய் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் எனலாம். இதனால் சந்தையில் ஏலக்காய்க்கான வர்த்தகத்தில் நெகட்டிவ் சென்டிமென்ட் நிலவுகிறது.

மேலும், ஏற்கெனவே முக்கியச் சந்தைகளில் உள்ள ஏலக்காய் இருப்பு தேவை அதிகரிக்காததன் விளைவால், தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தேக்கமடையும் ஏலக்காய் தரம் குறைந்து காணப்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ஆர்டர்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், வட மாநிலங்களிலும் தற்போது தேவை குறைவாகவே உள்ளது. ஆசியச் சந்தைகளுக்கு கவுதமாலாவிலிருந்து ஏலக்காய் தரமாகவும் இந்திய ஏலக்காயைவிட குறைவான விலையிலும் அனுப்பப்பட்டு வருவதால் இந்திய ஏலக்காய்களுக்கு கிராக்கி இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில், ஏலக்காய் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்பு அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்