செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி!

இதுதான் எலெக்‌ஷன் எக்கனாமிக்ஸ்ஜெ.சரவணன், சே.சின்னதுரை

‘10 ஆயிரம் கோடி முதலீடு.... 60 ஆயிரம் கோடி லாபம்’ கார்ப்பரேட் கம்பெனிகளைவிட இப்போது லாபம் தரும் பிசினஸ் தேர்தல் அரசியல்தான். அதிர்ச்சி அடைய வேண்டாம் இதுதான் எதார்த்த உண்மை. கட்டடங்கள் கட்ட வேண்டாம்... தொழிற்சாலைகள் தேவையில்லை...

தொழிலாளர்கள்கூட இல்லை... உற்பத்தி, விற்பனை, மார்க்கெட்டிங், பேலன்ஸ் ஷீட், ஆடிட்டிங் என கம்பெனிகளுக்கான தலைவலிகள் எதுவும் இல்லை. வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை இரைத்துவிட்டு, ஐந்தாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியை அள்ளலாம் என்பதுதான் பொலிட்டிக்கல் பிசினஸ் ஆகிவிட்டது. ஜனநாயகத்தை பணநாயகம் சூறையாட தொடங்கிவிட்டது. 

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பறக்கிறது. தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கிறது. கூட்டணி பேரங்கள் நடந்துவருகின்றன. நேர்காணல்கள் சடங்குகள் எல்லாம் முடிந்து விட்டன. இந்த சம்பிரதாயங்களைத் தாண்டி ‘ஓட்டுக்குப் பணம் மற்றும் பொருட்கள்’ தருவதையும் திரைமறைவில் தொடங்கி விட்டன கட்சிகள்.

தேர்தல் ஆணையமும் அதிகளவில் பணம் கொண்டு செல்வதையும், பணப் பரிமாற்றம் நடப்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அது என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், அரசியல் கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேலையைத் தேர்தலுக்குமுன் எப்படியோ வெற்றிகரமாக நடத்திவிடு கின்றன. அந்தத் தில்லாலங்கடி வேலையை அரசியல் கட்சிகள் எப்படித்தான் காதும் காதும் வைத்த மாதிரி கச்சிதமாக செய்து முடிக்கின்றன என்பது உலக மகா ரகசியம்.

ஒரு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவு செய்கின்றன, இந்தப் பணத்தை அரசியல் கட்சிகள் எங்கிருந்து எடுக்கின்றன, இப்படி செலவு செய்யும் பணம் மீண்டும் அந்தக் கட்சிக்கு திரும்பக் கிடைக்குமா என்பதெல் லாம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கே தெரிந்த மனக்கணக்கு. அந்தக் கணக்கின் விடை தேடி நாமும் புறப்பட்டோம். 

திருமங்கலம் ஃபார்முலா!

திமுக சின்ன லெவலில் தொடங்கி வைத்த ‘திருமங்கலம் ஃபார்முலா’ இப்போது ஒவ்வொரு பெரிய தேர்தலிலும் மிகப் பெரிய லெவலில் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் ரூ.2,000 வரை வாக்காளர்களுக்குக் கொடுப்பது ஒவ்வொரு தேர்தலிலும் நடப்பதுதான். இதற்காக எவ்வளவு பணத்தை செலவு செய்கிறார்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் ஓட்டுரிமை உள்ளவர்கள் 5 கோடிக்கும் மேல். ஓட்டுரிமை உள்ள வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் சரி, அனைத்துக் கட்சிகளும் ஓட்டுரிமை உள்ளவர் களுக்குக் ‘கொடுக்க வேண்டியதைக் கொடுத்து’ தங்களுக்கு ஓட்டுப் போடுமாறு கேட்பது வழக்கமாகிவிட்டது.

ஓட்டுக்காக பணம் கொடுப்பதை பெரிய கட்சிகள்தான் செய்கிறது என்று நினைக்கக் கூடாது. சிறிய கட்சிகள்கூட அவர்களின் ‘வசதி’க்கேற்க கொடுக்கத்தான் செய்கிறது. இந்த சிறிய  கட்சிகள் தங்களுக்கு வெற்றி சாதகமாக உள்ள சில தொகுதிகளில் மட்டும் செய்கின்றன. பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் இல்லாமல் போனதுக்கு கரன்சிகள்தான் காரணம் என்று சொல்கிறார்கள். பணம் தரவில்லை என்பதனால் நமக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்