சாதிக்கும் எண்ணமிருந்தால், தடை என்று ஏதுமில்லை!

ஜெ.சரவணன்

சிஐஐ என்று அழைக்கப்படும் இந்தியத் தொழிலகங்கள் கூட்டமைப்பின் தென் பிராந்திய இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் ‘வளரும் தொழிலதிபர் விருதுகள்’ வழங்கி இளம் தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் 6-வது விருது வழங்கும் விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது.

இந்த விழாவில், எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே.எம்.மாமென், இந்தியத் தொழிலகங்கள் கூட்டமைப்பின் தென் பிராந்திய தலைவர் ராஜ்ஸ்ரீபதி, முன்னாள் தென் பிராந்திய தலைவர் நவாஸ் மீரன், துணைத் தலைவர் ஷோபனா காமினேனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்து வெற்றியாளர்களை விருது வழங்கி கெளரவித்தனர்.

“நீங்கள் டம்ளர் நிரம்பியிருக்கிறதா, இல்லையா என்று விவாதிக்கும் நேரத்தில், நான் அந்த டம்ளரை விற்றுவிடுவேன்” என்று ஒரு பிசினஸ் மேற்கோளோடு பேசத் தொடங்கினார் எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே.எம்.மாமென். முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள்தான் வருங்காலத்தின் மிகப் பெரிய தொழிலதிபர்கள் என்று பாராட்டினார் அவர்.  ‘‘என் தந்தை (மாமென் மாப்பிள்ளை),  பலூன் பொம்மைகள் செய்து விற்கும் தொழிலைத்தான் முதலில்  தொடங்கினார்.

அது இன்று முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்