ஏற்ற இறக்கமுள்ள சந்தைதான் வருமானம் தரும்!

ஜெ.சரவணன்

‘‘மியூச்சுவல் ஃபண்டில் வரும் ஏற்ற இறக்கத்தைப் பார்த்து புதிய முதலீட்டாளர்கள் கொஞ்சம் தயங்கவே செய்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் செயல்படும் விதம் பற்றி சாதாரண மக்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்’’ என்கிறார் ஸ்ரீராம் அஸெட்  மேனேஜ்மென்ட் கம்பெனியின் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவின்  தலைவர் டி.ராமநாதன். அவருடன் பேசியதிலிருந்து...

“எந்தவொரு முதலீடாக இருந்தாலும், என்ன காரணத்துக்காக முதலீடு செய்கிறோம், நாம் முதலீடு செய்யும் பணம் எப்போது நமக்கு தேவைப்படும், எவ்வளவு தேவைப்படும் - இந்த மூன்று விஷயங்களை மனதில் வைத்தே முதலீடுகளைத் திட்டமிட வேண்டும்.

நமது முதலீடுகளைப் பொறுத்தவரை, பணவீக்கம் (விலைவாசி உயர்வு) என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஆனால், அந்தப் பணவீக்கத்தைத் தாண்டியும் வருமானம் தரும் ஒரு இடமாகப் பங்குச் சந்தை உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்