ஷேர்லக்: ஏற்றத்தில் சந்தை: என்ன காரணம்?

வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் சந்தை விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை அன்று மதியச் சாப்பாட்டு வேளையில் நம் அலுவலகத்துக்கு வந்திருந்தார் ஷேர்லக். அவரை அழைத்துக் கொண்டு மாடியில் உள்ள கேன்டீனுக்கு அழைத்துச் சென்றோம்.

அவருக்கு ஒரு ஃபுல் மீல்ஸை வாங்கித் தந்துவிட்டு, நாம் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டபடி பேச ஆரம்பித்தோம்.

‘‘சந்தை தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறதே!’’ என்றோம். குலோப்ஜாமுனை முதலில் சாப்பிட்டவர், நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.

‘‘ஏப்ரல் 5-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடக்க விருக்கிறது. இதில் ரெப்போ ரேட்டை 0.25% குறைக்க வாய்ப்பு இருப்பதாக பலத்த எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே நிலவுவதால், சந்தை ஏறிக் கொண்டே இருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக. தவிர, வருகிற 31-ஆம் தேதி அன்று இருக்கும் என்.ஏ.வி. மதிப்பின் அடிப்படை யில்தான் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்களுக்கு போனஸ் போன்ற சமாச்சாரங்கள் நிர்ணயம் செய்யப்படும். எனவே, என்.ஏ.வி. குறைந்துவிடாமல் பார்த்துக் கொண்டு வருகிறார்கள் ஃபண்ட் மேனேஜர்கள்.  ஏற்கெனவே விற்று வைத்திருந்த பணத்தை ஃபண்ட் நிறுவனங்கள் இப்போது மெதுவாக சந்தைக்குள் செலுத்திக் கொண்டு இருப்பதால், வருகிற 31-ம் தேதி சந்தை பெரிய அளவில் இறங்க வாய்ப்பில்லை. (ஆனால், உலக அளவில் பெரிய நிகழ்வு ஏதும் நடந்தால், சந்தை இறங்கவே செய்யும்.) தவிர, 5-ம் தேதி ஆர்.பி.ஐ. கூட்டம் என்பதால், சந்தை இறங்காமல் தொடர்ந்து மேல் நோக்கியே போகும் என்று நம்பலாம்’’ என்று உஷாராக பேசினார் ஷேர்லக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்