இந்தியப் பங்குச் சந்தையைப் பாதிக்கும் உலக முக்கிய டேட்டாக்கள்!

தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

மெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது... இந்தியப் பங்குச் சந்தை சரிந்தது. சீனப் பொருளாதாரம் வலிமை குன்றியது... இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது என்றெல்லாம் நீங்கள் படித்திருப்பீர்கள்.

இப்படி தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல, உலகத்தின் ஏதோ ஒரு மூலையில், ஏதாவது நிகழ்வதால் அது இந்தியப் பங்குச் சந்தையையும் பாதிக்கிறது. உலகில் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் எல்லா நாடுகளின் சந்தைகளையும் பாதிக்கிறது.

இந்த நிகழ்வுகளை பொருளாதாரம் சார்ந்த நிகழ்வு, அரசியல் சார்ந்த நிகழ்வு என இரண்டாகப் பிரிக்கலாம்.

ஏன், இந்தியப் பங்குச் சந்தை தனித்து இயங்க முடியாதா, இந்திய அரசு நினைத்தால் இதை தடுத்து நிறுத்த முடியாதா? இப்படி பல கேள்விகள் உங்களுக்கு வரலாம். முதலில், உலக சந்தையின் நிகழ்வுகள் எவ்வாறு நம் சந்தையை பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்