பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் : கடந்த வாரத்தில் சந்தை ஏற்றம் கண்டது. நாம் முந்தைய வாரம் குறிப்பிட்டிருந்த நிஃப்டி இலக்கான 7745, பேங்க் நிஃப்டி இலக்கான 16100 புள்ளிகளை நோக்கி பயணித்தது. புதன் கிழமை நிஃப்டி 7716.50லும் பேங்க் நிஃப்டி 15887.75-லும் நிலை பெற்றது.

பலவீனமான விஷயங்கள் இல்லை என்பதால் சந்தை இந்த நிலையிலிருந்து மேலேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தையில் அதிகம் சார்ட் பொசிஷன்கள் இருக்கும்.

சந்தை தற்போதைய நிலையிலிருந்து மேலேறும் போது மேலும் பல புதிய சார்ட் பொசிஷன்கள் உருவாகும். இது நிஃப்டி 7800-ஐ நோக்கி உயர்ந்தால் தான் சாத்தியம். இது நடக்கவில்லை என்றால் பாட்டம் சப்போர்ட் 7400 என்கிற அளவில் சந்தை ரேஞ்ச் பவுண்டில்தான் வர்த்தகமாகும்.

பேங்க் நிஃப்டி 16000-க்கு உயர்ந்த நிலையில் வங்கிப் பங்குகளில் பிராஃபிட் புக்கிங் நடந்ததால், புள்ளிகள் இறக்கம் கண்டது. வட்டி விகிதம் எப்போது வேண்டுமானாலும் குறைக்கப்படும் என்கிற வதந்தியால் வங்கிப் பங்குகள் பெரிய அளவில் இறக்கம் காண வாய்ப்பில்லை. 15500-ஐ லோயர் சப்போர்ட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்