பிசினஸ் சீக்ரெட்ஸ் - 38

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கேளுங்கள் சொல்கிறேன்!400 வது இதழ் ஸ்பெஷல்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

டந்த பல வாரங்களாக பிசினஸ் சூட்சுமங்களை இந்தத் தொடரில் சொல்லி வந்தேன். இப்போது வாசகர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

? புதிதாக பிசினஸ் தொடங்கத் திட்டமிட்டு வருகிறேன். எந்த தொழிலை தொடங்கலாம், எப்படி தொடங்கலாம் என்று சொல்லுங்கள்.

@ - பாலா

‘‘நீங்கள் உங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உங்களுக்கு எவ்வளவு தொழில் அனுபவம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. தொழில் தொடங்குவதற்குத் தேவையான முதலீடு, பயிற்சி போன்ற விஷயங்கள் பற்றியும் நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. உங்களுக்கு நான் எந்த தொழிலை சிபாரிசு செய்வது?

முதலில் உங்களுக்கு எந்த விதமான தொழில்களில் விருப்பம் இருக்கிறது என்று பாருங்கள். எல்லாருக்கும் எல்லா விதமான தொழில்களும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உங்களுக்குப் பிடித்தமான தொழில்களைக் கண்டுபிடிக்க சந்தைக்குச் செல்லுங்கள். தொழில் செய்கிறவர்களிடம் பேசுங்கள். ஒன்றுக்கு பத்து பேரைப் பார்த்து பேசினால், எந்தத் தொழில் எப்படி போகிறது என்பது உங்களுக்குப் புரியும்.

ஒருவர் தனக்கேற்ற தொழிலை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பது பற்றி இந்தத் தொடரில் விளக்கமாக எழுதி இருக்கிறேன். கூடிய விரைவில் இந்த தொடர் கட்டுரை ஒரு புத்தகமாக வெளிவரும். புத்தகமாக வந்தபிறகு அதை வாங்கிப் படிக்கவும். அப்போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும். அதுவரை தொழில் தொடங்க நினைக்கும் உங்கள் எண்ணத்தை மட்டும் மாற்றிக் கொண்டுவிடாதீர்கள்.’’

? கடந்த 30 வருடங்களாக கப்பல் துறையில் வேலை பார்த்துவிட்டு, இப்போது துபாயில் ஒரு டிரேடிங் கம்பெனி தொடங்கி இருக்கிறேன். வட கிழக்கு ஆப்பிரிக்காவை மையமாக வைத்து சலவை சோப்பைத் தயாரித்து விற்கும் தொழிலைத் தொடங்கி இருக்கிறேன்.

எங்கள் தயாரிப்பு  முன்னணி பிராண்ட்-ன் தயாரிப்பை விட சிறப்பாக உள்ளது. முன்னணி பிராண்ட் சோப்பானது மேலட்டை கூட இல்லாமல் இருக்கிறது. ஆனால், அதுதான் 85 சதவிகித மார்க்கெட் ஷேரை வைத்திருக் கிறது. நீண்ட காலமாக இந்த பிராண்ட் இருப்பதால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. பெரிய நிறுவனம் என்பதால், நிறைய  உற்பத்தி  செய்து  கடைகளில் அடுக்கிவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்