வங்கிக் கடன் விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

ரூ.500 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு, திரும்பத் தராத சில பல தொழில் நிறுவனங்களின் பெயரை எழுதி, அதை மூடப்பட்ட உறையில் இட்டு, உச்ச நீதிமன்றத்திடம் சமர்பித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி காப்பாற்ற முயற்சிப்பது ஏன், சாதாரண மக்கள் மீது ரிசர்வ் வங்கிக்கு அக்கறை இல்லையா என்றெல்லாம் பலரும் பல விதங்களில் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி செய்ததை முழுக்க தவறு என்று சொல்லிவிட முடியாது. தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் வாங்கும்போது அதை திரும்பத் தரக்கூடாது என்கிற நோக்கத்தில் வாங்குவதில்லை. உள்ளூர் மற்றும் சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம், குறிப்பிட்ட பிசினஸில் ஏற்படும் மாற்றங்கள் என பல காரணங்களினால் ஒரு நிறுவனம் வாங்கிய கடனை திரும்பத் தர முடியாமல் போகிறது.  பொருளாதார சூழல் மாறும்போது, மீண்டும் இந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து, கடனை திரும்பக் கட்டிவிடும். அதற்குள் இந்த நிறுவனங்களின் பெயர் வெளியே தெரிந்தால், மனரீதியில் உற்சாகம் இழக்குமே என்பது ரிசர்வ் வங்கியின் கவலை. இதில் என்ன குற்றம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்