இன்கம் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றது?

டி.ராமநாதன், சி.எஃப்.பி, ஸ்ரீராம் விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் புராடெக்ட் டெவலப்மென்ட் தலைவர், ஸ்ரீராம் ஏ.எம்.சி.400 வது இதழ் ஸ்பெஷல்

ன்கம் ஃபண்டுகளில் திரட்டப்படும் பணம், நிரந்தர வருமானம் தரக்கூடிய பாண்டுகள், கடன் பத்திரங்கள், மணி மார்க்கெட் முதலீடுகளான டெபாசிட் சர்ட்டிஃபிகேட்டுகள் போன்றவைகளில் முதலீடு செய்யப்படும். ஈக்விட்டி முதலீட்டு சாதனங்களில் அறவே இருக்காது.

நம்மில் பலரும் இது போன்ற இன்கம் ஃபண்டுகளில் ரிஸ்கே இல்லை என்று நினைக்கிறோம்.  ஆனால், இந்த வகையான ஃபண்டு களில் மூன்று வகையான ரிஸ்க்குகள் இருக்கின்றன. கிரெடிட் ரிஸ்க், இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க், ரீஇன்வெஸ்ட்மென்ட் ரிஸ்க்.

கிரெடிட் ரிஸ்க்!


பாண்ட் / கடன் பத்திரங்கள் வெளியிட்ட நிறுவனம் சரியான நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு வட்டியையும் அசலையும் திருப்பிச் செலுத்தவில்லை எனில் அதனால் வரும் ரிஸ்க் தான் கிரெடிட் ரிஸ்க்.

இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் !

வட்டி விகித மாற்றத்தால் பாண்டு மதிப்பில் ஏற்படும் மாற்றத்தைதான் இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் என்று சொல்கிறோம். இந்த இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் என்பது நாம் எத்தனை வருடங்கள் முதலீடு செய்கிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது. கடன் பத்திரங்களில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் வட்டிவிகித ஏற்ற இறக்கத்தால், அதன் மதிப்பு அதிக மாறுதல்களுக்கு உட்படும். குறைந்த வருடங்கள் முதலீடு செய்தால், மதிப்பு குறைந்த அளவிலான மாறுதல்களுக்கு உட்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்