வேணுமா எங்க ஓட்டு? தொழில்துறையின் கோரிக்கைகள்...

சோ.கார்த்திகேயன்400 வது இதழ் ஸ்பெஷல்

மிழக சட்டசபை தேர்தலுக்காக வாக்காளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மும்முரமாக தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றன.  இந்த நேரத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் எந்தமாதிரி முக்கிய அம்சங்கள் இடம் பெறவேண்டும் என்பது குறித்து பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகளிடம் பேசினோம். அவர்களிடம் பேசியதில் இருந்து தொழில் துறையின் பிரதான கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு முன்வைக்கிறோம். தேர்தல் அறிக்கையை  தயாரிக்கையில் இதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் அரசியல்வாதிகளே...!

தடையில்லா மின்சாரம் தாங்க!

தமிழகத்தில் எந்த ஒரு தொழில் துறையினரிடம் பேசினாலும் அவர்கள் வைக்கும் முதல் கோரிக்கையே தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதுதான். கடந்த மூன்று மாதத்துக்கு முன் காற்றாலை மூலம் போதிய மின்சாரம் கிடைத்ததால் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் பெற்று வருகின்றனர். இதுபோல் சிறிய நிறுவனங்களும் சோலார் மூலம் மின்சாரம் பெற அரசு மானியங்கள் வழங்க முன்வர வேண்டும்.

தண்ணீர் - கண்ணீர்!

எந்த ஒரு தொழில் துறையாக இருந்தாலும் தண்ணீர் என்பது அவசியமானதாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை கண்ணீர் அளிக்கும் பிரச்னையாக மாறிக்கொண்டே வருகிறது. கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் தமிழகத்துக்கு சரியான முறையில் தண்ணீர் தராமல் ஆட்டம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படாதபடி  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்