மோடியின் ‘பிரகதி’ இந்தியாவை வல்லரசாக மாற்றுமா?

ஜெ.சரவணன்400 வது இதழ் ஸ்பெஷல்

மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த  இரண்டாண்டு காலத்தில், திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா எனத் தொடந்து அவர் அறிமுகப் படுத்திய பல திட்டங்களும் மக்களைக் கவர்ந்தன. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில்  மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ‘துடிப்பான அரசும் துரிதமான தீர்வும்’ (PRAGATI - Pro Active Governance and Timely Implementation) என்கிற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

‘பிரகதி’ எனும் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி, “இந்தியாவின் செயல்பாடுகளை உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி வருகின்றன; இந்தப் புதிய நடைமுறையின் மூலம் நாட்டின் ஆட்சி முறையை மேலும் திறமையான தாகவும், பொறுப்பானதாகவும் மாற்ற முடியும்” என்று கூறினார். 

அது என்ன பிரகதி?

பிரகதி எனப்படும் இந்த நடைமுறை ஏற்கெனவே நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் அரசு நடைமுறைகளுக்குப் முற்றிலும் புதியது. முதல்வன் பாணியில் நாட்டின் அடிப்படை பிரச்னைகள் பிரதமரின் நேரடி பார்வைக்கு எடுத்து செல்லும் திட்டம் இது.

அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வருவதும், எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உயிர் இழப்பு, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு போன்றவற்றைக் கண்காணித்து அதற்குரிய நஷ்டஈடு வழங்குவது, பள்ளிகளில் கழிப்பறை மற்றும் கட்டட வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவது என பல நடவடிக்கைகள் அதன் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்