வருடத்துக்கு ஒரு ஃபாரின் டூர் போகணும்!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா400 வது இதழ் ஸ்பெஷல்

ளைஞர்களுக்கு முதலீடு குறித்த அறிவும், விழிப்பு உணர்வும் இல்லையென்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.  ஈரோட்டைச்  சேர்ந்த தனபால் எப்படி திட்டமிட்டு முதலீடு செய்கிறார் என்பதை அறியும்போது கொஞ்சம் ஆச்சரியமும் பிரமிப்பாகவும் இருக்கத்தான் செய்கிறது.  தனபால் என்ன சொல்கிறார்...

எனக்கு 28 வயது. எம்பிஏ படித்திருக்கிறேன். சொந்த ஊர் கரூர். அப்பா அம்மா அங்குதான் இருக்கிறார்கள். நான் சிறு வயதிலிருந்தே ஈரோட்டில் என் அம்மாச்சி (அம்மாவின் அம்மா) வீட்டில்தான் இருக்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட எந்தச் செலவுகளும் இல்லை. என் வருமானம் முழுவதையும் முதலீட்டுக்காகவே ஒதுக்குகிறேன். இப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். மாத சம்பளம் பிடித்தம் போக ரூ.15,500. ஆண்டுக்கு ரூ.2,500 வரை சம்பள உயர்வு இருக்கும். பங்குச் சந்தை வர்த்தகம் மூலமாக மாதம் ரூ.10,000 வரை சம்பாதிக்கிறேன். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள திட்டம் உள்ளது. வேலைக்குப் போகும் பெண்ணாக பார்த்து வருகிறோம். என் 31 வயதில் முதல் குழந்தை, 33 வயதில் இரண்டாவது குழந்தை என பிளான் வைத்துள்ளேன். இரண்டு குழந்தைகளுக்கும் முதலீட்டை  ஆரம்பிக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்