ஷேர்லக்: எட்டு நிறுவனங்களுக்கு தடை!

‘‘ஹாப்பி நியூ ஃபைனான்ஷியல் இயர்’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.

‘‘இந்த நிதி ஆண்டில் உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் மதி நலமும் நிதி நலமும் கிடைக்கட்டும்’’ என்று வாழ்த்தினார். அவரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம். 

‘‘நிஃப்டி பார்மா இண்டெக்ஸ் 52 வார சரிவை அடைந்திருக்கிறதே?’’ என்றோம் சற்று சோகமாக.

‘‘லூபின், சிப்லா, சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், கிளென்மார்க் பார்மா, அரபிந்தோ பார்மா உள்ளிட்ட பல பார்மா நிறுவனப் பங்குகள்  விலை குறைந்ததை அடுத்து நிஃப்டி  பார்மா இண்டெக்ஸும் அதன் 52 வார குறைவை அடைந்திருக்கிறது. லூபின் நிறுவனத்தின் கோவா தொழிற்சாலையில்  அமெரிக்கா வின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சோதனை நடத்தியது. சோதனை குறித்த முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையிலும் அதன் விலை குறைந்துள்ளது. மற்ற பார்மா நிறுவனங்களை விட அதிக பட்சமாக 14% வரை குறைந்து ரூ.1280-க்கு வர்த்தகமானது. பார்மா பங்குகள் குறுகிய காலத்தில் விலை சரிவை சந்தித்தாலும் நீண்ட காலத்தில் அவை லாபம் தரும் முதலீடாக இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்’’ என்றார். 

‘‘டாடா ஸ்டீல் பங்கின் விலை புதன்கிழமை அன்று ஒரே நாளில் 7% அதிகரித்துள்ளதே?’’ என்றோம் ஆச்சரியத்துடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்