வட்டி விகிதம் குறைந்தால் பங்குச் சந்தையின் போக்கு எப்படியிருக்கும்?

சி.சரவணன்400 வது இதழ் ஸ்பெஷல்

ந்தியப்  பங்குச் சந்தை நீண்ட நாட்களாகவே ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்கிற  எதிர்பார்ப்பு  பலமாக இருக்கிறது. இந்த பின்னணியில், சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்று ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘நிஃப்டி புள்ளிகள் 7700 என்கிற நிலையில் இருக்கிறது. சந்தை இதற்கு மேல் பெரிதாக ஏறும் என்று சொல்வதற்கு இல்லை. சந்தை மிக குறுகிய காலத்தில் 7830 வரைக்கும் ஏறலாம். அதைத் தாண்டி இப்போதைக்கு ஏற வாய்ப்பு இல்லை. நடப்பு 2016-ம் ஆண்டில் நிஃப்டி அதிகபட்ச புள்ளிகள் 7972-ஆக உள்ளது. அதனை தாண்ட வாய்ப்பு இல்லை. சந்தை இறங்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. 7680-க்கு கீழே இறங்கினால், மே மாதத்தில் 6800 புள்ளிகளுக்கு இறங்க வாய்ப்பு இருக்கிறது. ஜூன், ஜூலையில் நிஃப்டி புள்ளிகள் 6300-க்கு இறங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.

‘‘சந்தையில் இப்போது நடப்பது தற்காலிக ஏற்றம்தான். வெளிநாட்டு வர்த்தகக் கடன் (இசிபி), வட்டி விகித உயர்வு விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தால் லிக்விடிட்டி சார்ந்துதான் சந்தை ஏறி இருக்கிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் சேர்மன் ஜெனட் யெலன், வட்டி விகித உயர்வை மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்வோம் என்று புதன்கிழமை குறிப்பிட்டார். இதன் காரணமாக, அன்றைக்கு மட்டும் சென்செக்ஸ் 438 புள்ளிகளும் நிஃப்டி 138 புள்ளிகளும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் எஃப்ஐஐக்களின் முதலீடும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை மட்டுமே அவர்கள் சுமார் ரூ.1,440 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்