டிரேடிங்கில் தொடர் வெற்றி சாத்தியமா?

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்400 வது இதழ் ஸ்பெஷல்

சில டிரேடர்கள் தங்கள் மாத சம்பளத்துடன் தினப்படி டிரேடிங்கில் சம்பாதிக்கும் தொகையை வருமானமாக எடுத்து பட்ஜெட் போடுகிறார்கள். இந்த மாதம் கிடைத்தது அடுத்த மாதமும் கிடைக்கும் என்று அசாத்தியமாக நம்புகிறார்கள். டிரேடிங்கில் தொடர் வெற்றி என்பது சாத்தியமா?

சாத்தியம்தான். ஆனால், அதற்கு நீங்கள் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும். எப்படி?

கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என எல்லாவிதமான கால கட்டத்திலும் டிரேடிங் என்பது அதிக ரிஸ்க் உடைய ஒரு காரியம்தான். இந்த ரிஸ்க்கான விஷயத்தில் நடக்கும் டிரேடர்களின் வாழ்க்கைப் பயணத்தின் மூன்று படிநிலைகளைப் பார்த்தால், பல விஷயங்கள் நமக்குப் புரியும்.

சந்தையில் டிரேடிங் செய்யலாம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் சந்தைக்குள் வருகின்றனர். டிரேடர்கள் பலரும் தங்களுடைய டிரேடிங் பயணத்தில் ஆரம்ப நிலையில் சந்தையின் விலை நிர்ணயச் செயல்பாடுகள் புரியாமலும், சரியான ஸ்ட்ராட்டஜிகளை வடிவமைத்து செயல்படுத்தத் தெரியாமலும் பல தவறுகளை செய்கின்றனர். டிரேடிங்கில் தவறுகள் என்றால் நஷ்டம்தானே!  நஷ்டத்தைப் பார்த்து சிலர் இந்த முதல் படி நிலையிலேயே டிரேடிங்கை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்